சூலூர் காங்கயம்பாளையம் ஊராட்சி கிராமசபை கூட்டதில் காந்தி ஜெயந்தி அன்று காங்கேயம்பாளையம் சக்தி நகரிலுள்ள சமுதாய கூட கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் எ-ஒன் நகர் பகுதியில் அமைந்திருக்கும் மூன்று பார்க்குகளில் மரக்கன்று வைத்து பராமரித்து வரும் காங்கேயம்பாளையம் நேரு நகரைச் சேர்ந்த ஜோட்டிக்குரியன் என்பவரை ஊராட்சி மன்றம் சார்பாக பாராட்டி பரிசு வழங்கியுள்ளனர்
ஜோட்டிக்குரியன் இவர் நெடுஞ்சாலைத்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். முந்நூறுக்கு மேற்பட்ட மரங்களை எ-ஒன் பகுதியில் நட்டு பராமரித்து வருகிறார். கொய்யா, சப்போட்டா, மா மரம். பப்பாளி, நெல்லிக்கனி, மாதுளம் போன்றவைகளையும் சில்வர் ஓக். பூவரசு. புளி போன்ற மரங்களும் நடப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகேஸ்வரி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். சூலூர் வட்டார வளர்ச்சி முத்துராஜ் ஜோட்டிக்குரியனை கௌரவித்தார் ஒன்றிய உறுப்பினர் வேலசுப்பிரமணியன், வார்டு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன்ஈ சாந்திர ராஜேந்திரன், செந்தில் முகிலன். ஊராட்சி செயலாளர் வினோத். பொறியாளர்அருண். கே.எஸ். சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.