பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பேரூராட்சி வழித்தடத்தை அகலப்படுத்த கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு மேட்டுபாளையம் தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ், கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் நெ.4 வீரபாண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயராமன் மற்றும் ஜெபி நகர், சீனிவாச நகர், பாலாஜி கார்டன் பொது மக்கள் சங்க நிர்வாகிகள் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர் அதில் இந்திய அரசு அச்சக வடபுற எல்லையோரமாக வரும் நெ.4 வீரபாண்டி பேரூராட்சி பத்து அடி வழித்தடத்தை முப்பது அடி வழித்தடமாக அகலப்படுத்த கோரி பேஸ்டர் இன்ஸ்டியூட்டிடம் வலியுறுத்துமாறு கோரிக்கை வைத்தோம் இப்படி முப்பது அடியாக வழித்தடத்தை அகலபடுதினால் பேஸ்டர் இன்ஸ்டிட்யூட் மற்றும் பொது மக்களும் பொது வழியாக உபயோக படுத்தி கொள்ளமுடியும். இதனால் பள்ளி வேன் ஆம்புலன்ஸ், கேஸ் வாகனம், விவசாய வாகனம் மற்றும் மேற்கு புறமாக செல்லும் செல்வபுர விவசாயிகள் பொதுமக்கள் என எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது நெ.4 வீரபாண்டி பேரூராட்சியின் நீண்ட வருட கால கோரிக்கை ஆகும் எனவே தாங்கள் பத்து அடி தடத்தை முப்பது அடி தடமாக மாற்ற நடவடிக்கை எடுத்தால் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ள பெரு உதவியாக இருக்கும் என இந்த மனு மூலம் கேட்டு கொள்கிறோம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களிடம் கூட்டாக மனு அளித்தனர்