ஆற்று நீரில் கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் புகார் கண்டுகொள்ளாத கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஸ்வரன் முற்றுகை

 ஆற்று நீரில் கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் புகார் கண்டுகொள்ளாத கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஸ்வரன் முற்றுகை


ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டி. என்.பாளையம் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சியில்,  கணக்கம்பாளையம் புதூர் ,எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் ஆற்று குடிநீரில் சாக்கடை கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்.


கணக்கம்பாளையம் புதூர் மற்றும் எம்ஜிஆர் நகரில் சுமார் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் வடிகால் பிரச்சினைக்காக அந்தியூர் எம்.எல்,ஏ வெங்கடாசலம் ஆய்வுக்கு வந்த போது பொதுமக்கள் எம்.எல். ஏ வை சூழ்ந்து  ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஸ்வரன் மீது சராமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்தனர்.அதில் முக்கிய பிரதான பிரச்சனையாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை பற்றி கூறினார்கள், தொடர்ந்து கணக்கம்பாளையம் புதூர் திமுக பூத் கமிட்டி ஏஜென்ட் ஆண்டவன் என்பவர் கூறுகையில், கடந்த இரண்டு மாத காலமாக குடிநீரில் சாக்கடை கழிவு நீர் கலந்து வருவதாக ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை புகார் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை எனவும்,தொடர்ந்துதெருவிளக்கு பராமரிப்பு ,சாக்கடை சுத்தம் செய்வதில்லை எனவும் கூறினார்.


கடந்த இரு தினங்களுக்கு முன்பு வந்த குடிநீரில் கூட சாக்கடை நீர் கலந்து வந்ததாக பெண்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.எம்.எல்.ஏ ஆய்வுக்கு வந்த பிறகும் கூட ஊராட்சி மன்ற தலைவர் சம்பவ இடத்திற்கு வராததால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை வர வைத்தனர்.தாமதமாக வந்த ஊராட்சி மன்ற தலைவரை எம்.எல்.ஏ முன்னிலையில் பொதுமக்கள் மக்கள் சூழ்ந்து சராமாரியான கேள்விகளை கேட்டனர்.

பொதுமக்கள் கூறிய புகார் பற்றி கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஸ்வரனிடம்செய்தியாளர்கள் கேட்டபோது ,நானும் டேங்க் ஆப்ரேட்டர் பாலு என்பவரும் தொடர்ந்து இரண்டு மாத காலமாக பைப் லைனில் உடைந்த பகுதியை தேடி வருகிறோம்.ஆனால் இன்று வரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை மீண்டும் தேடிக் கொண்டே இருக்கிறோம் என கூறினார்.


மேலும் இப் பிரச்சினையை கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மைதிலி,இந்திரா தேவி ஆகியோர் கூறுகையில்,குடிநீர் பிரச்சினை என்பது சாதாரண பிரச்சனை அல்ல எனவும் இந்த இந்தப் பிரச்சினை குறித்து விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்,ஒன்றிய செயலாளர் எம்.சிவ பாலன்,ஒன்றிய பொருளாளர் கார்த்திகேயன்,மாவட்ட பிரதிநிதி திருமுருகன் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் இருந்தனர்.


இதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ,வும் ஒன்றிய செயலாளர்.அதிகாரிகள் வரும்போது கூட ஊராட்சி மன்ற தலைவர் வருவதில்லை அவரை தேடுவது பெரும்பாடாக உள்ளது.இதில் எங்கள் குடிநீரில் கழிவுநீர் கலப்பதைஎப்போது தேடி கண்டுபிடித்து  நல்லது செய்வார் என அங்கு கூடி இருந்த மக்கள் அப்பகுதி பொதுமக்கள் முனுமுனுத்தவாறே கலைந்து சென்றனர்.

Previous Post Next Post