*தீன் இலாஹி போன்றுள்ளது விஜய் கட்சி கொள்கை!* *சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கருத்து!*
முகலாய பேரரசர் அக்பரால் உருவாக்கப்பட்ட கலப்பு மதம் தீன் இலாஹி ஆகும். இம்மதம் கி.பி.1582ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அக்பர் தன் ஆட்சியின் கீழ் மக்கள் மதத்தின் பெயரால் வேறுபட்டு கிடப்பதை அறிந்து அவர்களை ஒன்றிணைக்க எண்ணினார். இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் மற்றும் சமணம் மதங்களை பின்பற்றும் மக்களை ஒன்றிணைக்க அவர் தீன் இலாஹி என்ற மதத்தை தோற்றுவித்தார். முகலாய மன்னர் அக்பர் பல்வேறு மதங்களில் இருக்கின்ற நல்ல விஷயங்களை மட்டும் எடுத்து தீன் இலாஹி என்னும் ஒரு மதத்தை உருவாக்கினார். இது 15ம் நூற்றாண்றைய கதை. அதே பாணியில் இன்று அனைத்துக் கட்சிகளிலும் இருக்கின்ற குறிப்பிட்ட நல்ல கொள்கைகளை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழக வெற்றி கழகம் தன்னுடைய கொள்கை பிரகடனத்தை விழுப்புரம் விசாலையில் நடைபெற்ற மாநாட்டில் அறிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். பெரியார் கொள்கையை ஏற்பதாகவும் அதில் கடவுள் மறுப்பை மட்டும் தவிர்ப்பதாகவும், திராவிடக் கட்சிகளின் மதச் சார்பின்மை, ஜாதி மத இன வேறுபாடுகளை கலைதல், தீண்டாமை ஒழிப்பு, சமதர்ம சமூகத்தை படைத்தல், பெண்கள் முன்னேற்றம், ஆளுநர் அகற்றம் ஆகியவற்றுடன் பாமக முன்னெடுத்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு, இடக்ஒதுக்கீடு, பிரதிநிதித்துவம், விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கையான ஆட்சியில் பங்கு மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் மது, போதை ஒழிப்பு, இளைஞர்களுக்கு வாய்ப்பு அடுத்து பெரும்பாலான அனைத்து கட்சிகளும் முன்வைக்கும் ஊழலுக்கு எதிரான அரசியல் ஆட்சி ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து கலவையாக தன்னுடைய கொள்கையை விஜய் பிரகடனப் படுத்தியுள்ளார். இது அன்றைய அக்பரின் தீன் இலாஹியை போல் உள்ளது. எது எப்படியோ வரிசையாக பல்வேறு கட்சிகளை புதுசு புதுசா பார்த்து பழகிப்போன நம் தமிழ் மக்கள், இனியாவது மகிழ்ச்சியாக ஒற்றுமையாக இருக்க அனைத்து அரசியல் கட்சிகளும் செயல்பட்டால் மட்டுமே தமிழக மக்களுக்கானதாக அமையும் என்பதே உறுதி. இல்லையேல் மேடை பேச்சு வெற்றுப்பேச்சாகவே முடியும். இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழக கொள்கைகள் குறித்து சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார்.