சத்தியமங்கலம், அருள்மிகு, பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலிருந்து மைசூர் சாமூண்டீஸ்வரி அம்மனுக்கு வஸ்திர மரியாதை.



2022-2023-ம் ஆண்டு இந்து சமய 
அறநிலையத்துறை மானியக் கோரிக்கை   எண்.47. அறிவிப்பு எண். 24-ல் .இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சட்டமன்றப் பேரவையில், இதர மாநிலங்களில் உள்ள திருக் கோயில்களுக்கும் தமிழகத்தில் உள்ள திருக் கோயில்களுக்கும், நல்லிணக்க உறவு மேம்பட தமிழகத் திருக்கோவில்களிலிருந்து இதர மாநிலத் திருக் கோயில்களுக்கு, வஸ்திர மரியாதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. சட்டமன்ற அறிவிப்பின்படி, ஈரோடு மாவட்டம். பண்ணாரி. அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக் கோவிலிலிருந்து,3-ம்ஆண்டாகஇன்று 16.10.2024ம் தேதி மதியம் கர்நாடகா மாநிலம் மைசூர் அருள்மிகு, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வஸ்திர மரியாதை செய்வதற்கு, பட்டுப் புடவை, மலர் மாலைகள், மஞ்சள். குங்குமம், பழங்கள், பூசை பொருட்கள் உட்பட கொண்டு செல்லப்பட்டது.

மைசூர். அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் ஜென்ம நட்சத்திரமான, ரேவதி நட்சத்திர தினமான நாளை 17.10.2024ம் தேதி வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு நடைபெறும் கால பூஜையின்போது அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வஸ்திர மரியாதை நிகழ்வு நடைபெறவுள்ளது. மேற்கண்ட வஸ்திர மரியாதை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக, ஈரோடு மண்டல இணை ஆணையர்.அ.தி.பரஞ்ஜோதி, இத் திருக்கோவிலின் துணை ஆணையர்/செயல் அலுவலர் இரா.மேனகா, திருக்கோயில் பரம்பரை அறங்காவ லர்கள்.வீ.புருஷோத்தமன். இராஜா மணி தங்கவேல்,எம். பூங்கொடி, திருக்கோவில் கண்காணிப்பாளர் சு.பாலசுந்தரி, திருக்கோயில் பூசாரி கள்,திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் பண்ணாரியிலிருந்து மைசூர், அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர்.












Previous Post Next Post