சென்னையில் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிசத் மாநில நிர்வாக குழு கூட்டம் 20 10 2024 ஆம் தேதி மாநில தலைமை அலுவலகமான வேதாந்த பவனில் தொடங்கியது. தலைமை வேதாந்தம் நிறுவனர் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் கிராம கோவில் பூசாரிகள் பேரவை வரவேற்புரை சோமசுந்தரம் மாநில பொதுச் செயலாளர், சிறப்புரை ஆர்.ஆர். கோபால் மாநிலத் தலைவர், முன்னிலை திருமதி.கிரிஜா சேஷாத்திரி மாநில துணைத்தலைவர், வாழ்த்துரை மாநில பொருளாளர் துளசிஸ்ரீராம், கணேசன் வழக்கறிஞர் மாநில இணைப்பொது செயலாளர், வழக்கறிஞர் விஜயகுமார் மாநில இணைப் பொதுச் செயலாளர், சந்திரசேகர் வழக்கறிஞர் மாநில இணைப்பொது செயலாளர், நன்றியுரை ராமசுப்பு மாநில இணை பொதுச் செயலாளர் இந்நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிசத்தின் வளர்ச்சி முக்கிய காரணிகளாக ஆதரவாளர்களை சேர்ப்பது பற்றியும் அனைத்து மக்களுக்கும் இந்து மித்ரன் இந்து விழிப்புணர்வு புத்தகத்தின் சந்தா வாங்குவது சம்பந்தமாகவும் நமது நாட்டில் தற்போது உள்ள பிரிவினைவாத சக்திகளையும் மதமாற்ற சக்திகளையும் மக்களை ஒருங்கிணைத்து விரட்டி அடிப்பதற்கு உடனடியாக ஊர் கமிட்டிகளை அமைத்து செயல்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் புதியதாக மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக கோவை சிவகுரு, வழக்கறிஞர் குமரேசன், ஈரோடு கஸ்தூரி ரங்கன் ஆடிட்டர், சேலம் சிவ மகேந்திரன், திருப்பூர் செல்வம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக சமுதாய வேலை செய்ய ஆலோசனையும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது
நிகழ்ச்சியில் இயக்க வளர்ச்சியை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் இரண்டு மாவட்டங்களாக உருவாக்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர் மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக நரசிம்மன் அறிவிக்கப்பட்டார் நிகழ்ச்சியில் கோட்ட நிர்வாகியான சபரிநாதன், கோட்ட அமைப்பாளரான குமரவேல், நெல்லை மணியன், தமிழ் முற்றம் பொறுப்பாளர் பாரதி, சேலம் மாவட்ட தலைவர் அருள், ஈரோடு மாவட்ட தலைவர் அஸ்வந்த், தர்மபுரி மாவட்ட தலைவர் சிவக்குமார் மேலும் மாநிலம் முழுவதிலிருந்து மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.