புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா தொடர்பான மாநில நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம்

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா நடத்துவது சம்பந்தமாக மாநில நிர்வாக மற்றும் செயற்குழுக் கூட்டம் கழகத்தின் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் முன்னிலையில் கழகத்தின் தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் தலைமயில் நடந்தது. புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில நிர்வாக மற்றும் செயற்குழுக் கூட்டம் 20. 10. 24 ஞாயிறு அன்று காலை 10. மணிக்கு தட்டஞ்சாவடி, வி. வி. பி. நகர் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. மாநில பொதுசெயலாளர் எ. மு. ராஜன் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். காரைக்கால் மாவட்ட தலைவர் கணபதி சுப்ரமணியன், உள்ளாட்சி தேர்தலை நடத்தாததை கண்டித்து நடத்தப்படும் தொடர் போராட்டத்தின் ஏழாம் கட்ட போராட்டம் 5/11/2024 அன்று காரைக்காலில் நடைபெறவுள்ள நிலையில் போராட்டம் சம்பந்தமான விளக்கங்களை அளித்து பேசினார். கழகத்தின் தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் அவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதி கழகத்தின் முதலாம் ஆண்டுவிழா கொண்டாடுவது பற்றியும், காரைக்காலில் ஏழாம் கட்ட போராட்டத்தில் கலந்து கொள்வது சம்பந்தமாகவும் விளக்கம் அளித்து பேசினார். கூட்டத்தில் மாநில துணை தலைவர் நித்தியானந்தன், மாநில செயலாளர்கள் சிவகுமாரன், பரந்தாமன் , ரவிகுமார், மாநில இணை செயலாளர் இளங்கோவன், துணை செயலாளர்கள் சுப்ரமணியன் , கலிய பெருமாள் , உதவி செயலாளர்கள் ஆண்டாள் , இதயவேந்தன் , முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் தனஞ்ஜெயன் , வழக்கறிஞர் கார்த்திகேயன் மற்றும்
 மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அணித் தலைவர்கள், உறுப்பினர்கள் அனவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
கூட்டத்தில், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி ஆறு கட்ட போராட்டம் , உழவர்கரை , அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம், வில்லியனூர், பாகூர் , திருபுவனை ஆகிய இடங்களில் நடைபெற்றது . அது சம்பந்தமாக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றியும் , எதிர்கட்சிகள் நமது கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பது போல் அறிக்கை வெளியிட்டிருப்பது சம்பந்தமாகவும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் நவம்பர் 1 கழகத்தின் முதலாம் ஆண்டு விழா கொண்டாடுதல் சம்பந்தமாகவும்,
 நவம்பர் 5 காரைக்காலில் நடைபெற உள்ள ஏழாம் கட்டப் போராட்டத்தில் கலந்துக்கொள்ளுதல் சம்பந்தமாகவும்  கலந்து ஆலோசிக்கப்பட்டது.முடிவில் கழகத்தின் மாநில பொருளாளர் செல்வகுமாரி நன்றி கூறினார்.
Previous Post Next Post