காரைக்கால் பார்வதீஸ்வரர் கோயில் நில மோசடி வழக்கு முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது ஆளுநர் சட்டசபையை முடக்க வேண்டும் புதுச்சேரி மக்கள் முன்னேற்ற கழக சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் வலியுறுத்தல்

 
 காரைக்கால் பார்வதீஸ்வரர் கோயில் நில மோசடி வழக்கு முதல்வர் ரங்கசாமி தார்மீக பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது துணை நிலை ஆளுநர் தலையிட்டு சட்டசபையை முடக்கி வைக்க வேண்டும் என்று மக்கள் முன்னேற்ற கழக சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் வலியுறுத்தல்

காரைக்கால் மாவட்டத்தில் நடந்துள்ள இமாலய ஊழல் அதாவது பார்வதீஸ்வரர் கோயில் நிலங்கள் சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் பச்சூறில் உள்ள கோயில் நில ஊழல் ஆகிய இரண்டு கோயில் நில ஊழல்களும் மக்களிடையே பெரும் பரபரப்பையும் , எதிர்மறை எண்ணங்களையும் உருவாக்கியிருக்கிறது. பார்வதீஸ்வரர் கோயிலின் எட்டு ஏக்கர் நிலத்தை போலி பட்டா தயாரித்து அதிகாரிகள் விற்பனை செய்திருக்கிறார்கள். இதற்கு ஆளுங்கட்சியை சார்ந்தவர்களும் உடந்தையாக இருநதிருக்கிறார்கள். என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. முன்பெல்லாம் அரசியல் வாதிகள் தான் ஊழல் செய்வார்கள் என்ற எண்ணம் போய் இன்று அரசியல் வாதிகளின் துணையோடு உயர் அதிகாரிகள் முதல் அடுத்த நிலை அதிகாரிகள் வரை ஊழல் செய்ய துணிந்து விட்டார்கள் என்பதையே காண்பிக்கிறது. இது மக்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்து சமய துறையை கவனிக்கும் முதல்வர் என்ன பதில் சொல்ல போகிறார். ஆன்மீகத்தில் நம்பிக்கையுள்ள முதல்வர் சிவன் சொத்து கொல நாசம் என்ற வகையில் நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுவாரா ? அல்லது தர்மத்தின் தலைவனாக இருந்து தார்மீக பொறுப்பேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா என்று மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டும். மக்களுக்கான முதல்வர் என்று நல்ல பெயர் எடுத்த காலம் போய் இன்று தனது செல்வாக்கு சரிந்து இருப்பதை முதல்வர் ரங்கசாமி உணர வேண்டும். ஏற்கனவே புதுச்சேரி காமாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கு பரபரப்பு இன்னும் அடங்க வில்லை அதற்குள் காரைக்கால் உட்பட பல ஊர்களில் கோயில் நில ஊழல் தோண்ட தோண்ட பூதாகரமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இதன் பின்புலனாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஆளுங்கட்சியை சார்ந்தவர்களும் மற்றும் தொடர்புடைய அரசியல்வாதிகள் முக்கிய புள்ளிகளுக்கு லஞ்சம் கொடுத்து இவர்களை காப்பாற்றுவதற்கு தயாராகி விட்டார்கள். பாண்டிச்சேரியில் ஒரு சில அரசியல்வாதிகளுக்கு இது போன்ற ஊழல் தான் முதலீடு? காவல்துறையில் பணிபுரிபவர்கள் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அரசியல்வாதிகளுக்கு பணத்தைக் கொடுத்து உயர் பதவிகளை பெற்றுவிடுகிறார் கள். இது புதுச்சேரி மக்களுடைய நம்பிக்கையை உடைப்பதற்கு சமமாகும்? மேதகு துணை நிலை ஆளுநர் அவர்கள் மிக நியாயமானவர் என்பதை மக்கள் அறிந்து உள்ளனர், அவர்கள் இதுபோன்ற செயல்களை முழுமையாக புதுச்சேரியில் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது நடந்து கொண்டிருக்கின்ற காரைக்கால் நிகழ்விற்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கண்டிப்பாக தலையிட வேண்டும் என்பதே மக்களின் எண்ணம் . இதற்கு புதுவை முதல்வரும் விலக்கல்ல. இதன் எதிரொலி 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தெளிவாக வெளிப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆகவே தனது இந்து சமய துறையில் ஏற்பட்ட களங்கத்தை போக்க முதல்வர் ரங்கசாமி தார்மீக பொறுப்பேற்று தனது முதவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் அல்லது இந்த விஷயத்தில் துணை நிலை ஆளுநர் தலையிட்டு சட்ட சபையை ஆறு மாதத்திற்கு செயல்படாமல் முடக்கி வைக்கவேண்டும் கேட்டுக்கொள்கிறேன் . இதன் மூலம் மக்கள் மத்தியில் புதுவை அரசின் மீது நம்பிக்கை ஏற்படும் என்பதை துணை நிலை ஆளுநர் கவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
Previous Post Next Post