புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி வில்லியனூரில் நான்காம் கட்ட போராட்டம்

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி வில்லியனூரில் நான்காம் கட்ட போராட்டம் சிறப்புரை கழகத்தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் கண்டன உரை சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன்
 புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாத மத்திய , மாநில அரசை கண்டித்தும் , உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த கோரியும் தொடர் போராட்டம் மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்ட போராட்டம் உழவர்கரை நகராட்சி அலுவலகத்தின் எதிரிலும் , இரண்டாவது கட்ட போராட்டம் அறியாங்குப்பத்திலும் , மூன்றாம் கட்ட போராட்டம் கடந்த வாரம் நெட்டப்பாக்கத்திலும் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து நான்காம் கட்ட போராட்டம் வில்லியனூர் பைபாஸ் சாலை பழைய எம்.ஜி.ஆர் சிலை அருகில் நடைபெற்றது அதற்கு முன்பாக மாநில செயலாளர் சிவகுமாரன் தலைமையில் இளைஞர்கள் ஊர்வலமாக போராட்டக் களத்திற்கு வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து கழகத்தின் சேர்மன் ஆர். எல் வெங்கட்டராமன் முன்னிலையில் கழகத்தின் தலைவர் பேராசிரியர் மு . ராமதாஸ் கழகத்தின் கொடியை ஏற்றி வைத்தார் இந்த தொடர் போராட்டத்திற்கு மாநில செயலாளர் பரந்தாமன் தலைமை தாங்கினார். ஆதி திராவிடர் நலன் அணி மாநில தலைவர் ரஞ்சித்குமார் , ரவி, மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் மோகனசுந்தரம் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினார். மாநில செயலாளர் சிவகுமாரன் போராட்ட களத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். கழகத்தின் பொதுச்செயலாளர் எ.மு.ராஜன் நோக்க உரை ஆற்றினார். கழகத்தின் சேர்மன் ஆர். எல் வெங்கட்டராமன் தனது கண்டன உரையின் போது புதுச்சேரியில் எதிர்கட்சிகள் , உள்ளாட்சி தேர்தலை நடத்தாத புதுவை அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் பெயரளவிற்கு எதிர்கட்சிகளாக செயல் படுவதை சுட்டிக்காட்டினார்.   
கழகத்தின் மாநில தலைவர் பேராசிரியர் ராமதாஸ் போராட்டத்தை துவக்கி வைத்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்து , உள்ளாட்சி தேர்தலை நடத்தாத புதுவை அரசை கண்டித்து சிறப்புரை ஆற்றினார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெகநாதன் கண்டன உரையாற்றினார். , தலைவர் ராமசாமி, தலைவர் ஜலால், மாநில துணை தலைவர் நித்தியானந்தன் ,, மாநில செயலாளர் ரவிகுமார், மாநில இணை செயலாளர் இளங்கோவன் , துணை செயலாளர் சுப்ரமணியன் , ராதாகிருஷ்ணன், அணி தலைவர் சந்திரன், ,கலியபெருமாள், இதய வேந்தன், ரகு, தனஞ்ஜெயன், காலாபட்டு குமார், கோமதி, வசந்தா தேவராசு, ஜெயபிரியா, ராஜேந்திரன், குளஞ் சியப்பன்.சங்கர், ஆகியோர் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள்.  
 போராட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் உதவி செயலாளர் ஆண்டாள் நன்றி தெரிவித்தார். 
 இதில் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள்,அணித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், மாநில வளர்ச்சியில் அக்கறையுள்ள சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்
Previous Post Next Post