புதுச்சேரியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாதிப்பு தொழிலாளர் நல சட்டத்தை கடைபிடிக்காத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் புதுவை அரசுக்கு மக்கள் முன்னேற்ற கழக சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் கோரிக்கை.


 புதுச்சேரியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாதிப்பு தொழிலாளர் நல சட்டத்தை கடைபிடிக்காத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் புதுவை அரசுக்கு மக்கள் முன்னேற்ற கழக சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் கோரிக்கை.

தினம் தினம் வாழ்க்கை போராட்டம் ,
குறைந்த பட்ச சம்பளம் பிழிந்தெடுக்கும் வேலை ,
புதுச்சேரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கலை பிரிவு ஆசிரியர்கள் ஆகியோரின் கஷ்டங்களை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களின் பணி சுமையை விட தனியார் பள்ளி ஆசிரியர்கள் பணி சுமை அதிகம் . ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு தொழிலாளர் நல சட்டங்கள் படி நியாயமாக கிடைப்பதில்லை. இதனை எதிர்த்து கேள்வி கேட்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அடுத்த சில நாட்களில் அந்த பள்ளியில் பணிபுரிய நிர்வாகம் அனுமதிக்காது வேலை நீக்கம் இதற்கு பயந்து தனியார் பள்ளியில் பணிபுரிய கூடிய ஆசிரியர்கள் எதிர்த்து குரல் எழுப்புவதில்லை. புதுச்சேரி மாநிலத்தில் 741 மாநில மற்றும் மத்திய அரசு பள்ளிகளும், 319 தனியார் பள்ளிகளும் உள்ளன. புதுச்சேரி கல்வி சட்டம்-1987 மற்றும் புதுச்சேரி பள்ளி கல்வித் துறை விதிமுறைகள்-1996 கீழ் பள்ளிகள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும், என்ற விதி உள்ளது. இதனை தனியார் பள்ளிகள் முறையாக கடைப்பிடிப்பதில்லை.அரசு பள்ளிகளில் தற்போது பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு பென்ஷன் கிடையாது. தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் கலை பிரிவு ஆசிரியர்கள் பல பேர் குறைந்த சம்பளத்துக்கே பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். நாட்டில் 42 லட்சம் ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் பணியாற்றுகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் , தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு
முன் அனுபவம் இல்லை என்றால் சம்பளம் குறைவாகத்தான் பெற வேண்டும். அனுபவம் பெற்ற ஆசிரியர்களை பொருத்தவரை பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு
20 ஆயிரம் தொடக்க சம்பளம், 9, 10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு
15000, 8ம் வகுப்பு வரை எடுத்தால்
10000 சம்பளம். நர்சரி வகுப்புகளுக்கு பாடம் நடத்த வரும் ஆசிரியர்கள் என்றால்
5000 முதல்
6000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இப்படி புதுச்சேரி மாநிலத்தில் தனியார் பள்ளிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத கலைத்துறை சார்ந்த ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இதில் வேதனை தரும் விஷயம் என்னவென்றால், பாதிக்கு பாதி ஆசிரியர்கள் மிகக்குறைந்த அளவே சம்பளம் பெற்று வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 10 மணி நேரமாவது வேலை செய்தாக வேண்டும். விடுமுறை என்பது முறையாக கிடைக்காது. அந்த அளவுக்கு தனியார் பள்ளிகள் ஆசிரியர்களை கசக்கி பிழிந்து வருகின்றன.
தனியார் பள்ளிகள் காலையில் 8 மணிக்கே தொடங்கிவிடும். அதற்கு முன்னதாக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்துவிட வேண்டும். ஒரு ஆசிரியருக்கு குறைந்தபட்சம் 8 பாட வேளை ஒதுக்கப்படும். 
தனியார் பள்ளிகளில் சேரும் ஆசிரியர்கள் திறமைக்கு ஏற்றார் போலத்தான் சம்பள உயர்வு கிடைக்கும். சுமார் ரகம் என்று நிர்வாகம் முத்திரை குத்தி விட்டால் அவர் கடைசி வரை சம்பள உயர்வை பார்க்கவே முடியாது. 

 இதனால் பல குடும்பங்கள் போதிய வருமானம் இன்றி ஒரு புறம் குடும்பம், ஒரு புறம் பள்ளி நிர்வாகத்தின் நெருக்கடி இதனால் பல ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. சில பள்ளி நிர்வாகங்கள் அதிக சம்பளம் கொடுப்பதாக எழுதி வாங்கிக் கொண்டு குறைந்த அளவே சம்பளம் தருகின்றனர். இல்லை என்றால் வேலையில் இருந்தே வெளியேற்றி விடுகின்றனர். இதனால் பல ஆசிரியர்கள் மனஉளைச்சலுடன் வேலை செய்து வருகின்றனர்
  சில தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்.மாணவர்கள் முன்பாகவே அந்த நிர்வாகத்தினர் ஆசிரியர்களை தரக்குறைவாக திட்டும் அவலம் நிகழ்கிறது, புதுச்சேரி மாநிலத்தில் தொழிலாளர் நலத்துறை என்பது செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது . தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இவர்கள் கட்டுப்பாட்டில் இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் அவ்வாறு தொழிலாளர் நல இயக்குனரகத்தின் கீழ் தனியார் பள்ளி ஆசிரியர்கள் இருக்கும் பட்சத்தில் இவர்கள் மாத ஊதியம் முரண்பாடுகளை கலைந்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை குறைந்தபட்சம் மாதம் 20 ஆயிரம் என்று அரசு. நிர்ணயம் செய்து சட்டம் இயற்ற வேண்டும். ஆசிரியர்களின் ஊதிய உயர்வு சட்டத்தை மதிக்காத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை பாரபட்சமின்றி அரசு ரத்து செய்ய வேண்டும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைந்து மேற்கண்ட ஊதிய உயர்வை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பல தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு பணிக்கொடை அதாவது கிராஜு விட்டி பணத்தை பிடித்தம் செய்கின்றனர் ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பல தனியார் பள்ளிகள் இந்த கிராஜுவிட்டி பணத்தை பல ஆண்டுகள் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு அளிக்காமல் பலத்த கொள்ளையடிக்கின்றனர், இவ்வாறு கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் பணிபுரியும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கிராஜுவிட்டித் தொகையை உடனுக்குடன் வழங்க வேண்டும் தொழிலாளர் நல சட்டங்கள் அனைத்தும் தனியார் பள்ளிகள் கடைபிடிக்கின்றனவா என்பதை தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்கள் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும். தொழிலாளர் நல சட்டத்தை கடைபிடிக்காத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும். இந்த அரசு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வில் தீப ஒளி ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது அருகில் தெரிவித்துள்ளார் 
Previous Post Next Post