தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் நடத்தும் அனைத்து மின் வாரியங்களுக்கு இடையேயான ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் 03.10.2024 முதல் 05.10.2024 வரை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. துவக்க விழா 03.10.2024, வியாழக் கிழமை அன்று காலை 8.00 மணிக்கு பிஎஸ்ஜி மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. அதன் தொடக்க விழாவில் கோவை மண்டல மின்வாரிய தலைமைப்பொறியாளர் பொறிஞர்.கொ.குப்புராணி அவர்கள் வரவேற்புரை வழங்கவும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் காவல் துறை தலைவர் பிரமோத் குமார் போட்டிகளை துவக்கி தலைமை தாங்கி சிறப்புரையாற்றவும் உள்ளனர்.
இவ்விழாவில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் இயக்குனர் பகிர்மானம் (பொறுப்பு) பொறிஞர். கு.இந்திராணி, தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தின் இயக்குனர், உற்பத்தி (பொறுப்பு) கனிகண்ணன், மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் இயக்குனர் (நிதி) சுந்தரவதனம் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். மேலும், இவ்விழாவில் சுரேஷ் குமார், செயலாளர், நிறுவனங்கள், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், சின்னநாகூர், சட்ட ஆலோசகர், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மற்றும் கி.தேவராஜ், செயலாளர் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
இவ்விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வாக 05.10.2024 அன்று மாலை 5.00 மணியளவில் கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நவஇந்தியா பின்புறம், அவிநாசி சாலை, பீளமேட்டில் பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா நடைபெற உள்ளது. மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி விழாவில் கலந்து கொண்டு விழாப் பேருரை ஆற்றி பரிசளிக்க உள்ளார். நிறைவு விழாவில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் இயக்குனர், பகிரமானம் (பொறுப்பு) பொறிஞர். கு.இந்திராணி வரவேற்புரை வழங்கவும், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆ.சிவகுரு பிரபாகரன் கோவை மாநகராட்சி ஆணையர், கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் க.ரங்கநாயகி மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். கோவை மண்டல தலைமைப் பொறியாளர் கொ.குப்புராணி, நன்றியுரை வழங்க உள்ளார்.