புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் தாகூர் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் எ.மு.ராஜன் எழுதிய 49 ஆவது நூல் வெளியீட்டு விழா

 பேராசிரியர் 
எ.மு.ராஜன் நூல் வெளியீட்டு விழா 

 தாகூர் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் 
எ. மு..ராஜன் எழுதிய 49 ஆவது நூல் வெளியீட்டு விழா புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
தாகூர் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் 
எ.மு.ராஜன் இதுவரை 40 நூல்களை எழுதி உள்ளார். அவர் எழுதிய நூல்களில் ஆறு நூல்கள் தமிழ்நாடு அரசு மற்றும் புதுச்சேரி அரசின் விருதுகளைப் பெற்றுள்ளன. புதுச்சேரி அரசின் கலைமாமணி, ஏர் இந்தியா நிறுவனத்தின் (BOLT) சிறந்த ஆசிரியர், இலக்கிய மாமணி, ஹைக்கூ செம்மல், உள்ளிட்ட 14 விருதுகளைப் பெற்றுள்ளார். அதில் ஒன்றான உலகச் சாதனையாளர் விருது நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 
சி.பி.ஐ. இயக்குனரால் வழங்கப்பட்டது.
 இதுவரை 25 நாடுகளுக்கு விழாக்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் மட்டுமல்லாது சுற்றுலாவாகவும் சென்று வந்துள்ளார்.
 இவர் 40 ஆண்டு காலம் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி தாகூர் கலைக் கல்லூரியின் முதல்வராக ஓய்வு பெற்றார். அவர் எழுதிய 49 ஆவது நூலான "இளைஞர்கள் முன்னேற 100 வழிகள்" எனும் நூல் தமிழ் சங்கத்தில் வெளியிடப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் மு.ராமதாஸ் நூலை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.
 அருட்திரு ஆ.ச.அந்தோணிசாமி அடிகளார் விழாவுக்குத் தலைமை ஏற்றார். முனைவர் திருமலைவாசன் நூலை அறிமுகம் செய்து வைத்தார்.
 பேராசிரியர் எ.மு.ராஜன் மாணவர்கள் காரைக்கால் மாவட்ட ஓய்வு பெற்ற கூடுதல் ஆட்சியர்  தினேஷ் மங்கலாட், கலைமாமணி அறிமதி இளம் பரிதி, கலை மாமணி சுந்தர முருகன், திரு ஸ்ரீராம், குலசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துபாயில் இருந்து  ரகுபதி இணைய வழியில் வாழ்த்துரை வழங்கினார்.
 நூலாசிரியரின் குடும்ப உறுப்பினர்கள் அண்ணன்கள்  கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணியர், ராமச்சந்திரன், தம்பி கந்தசாமி, தங்கை திருமதி சரளாதேவி, மகள் திருமதி இளவரசி டாக்டர் ஷர்மிளா மகன் இளங்கோ பேத்திகள் லட்சுமி பிரியா, பாரதி பிரியா, சிநேக பிரியா, மற்றும் ரியா ஜெயபாலன் ஆகியோர் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.
 நிகழ்ச்சியின் இறுதியில் டாக்டர் ஷர்மிளா ஜெயபாலன் நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சியில் 
எ.மு.ராஜன் சக கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் அவரது உறவினர்களும் நண்பர்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Previous Post Next Post