கோவை சூலூரில் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா விசர்ஜன பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது

கோவை மாவட்டம் சூலூரில் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா விசர்ஜன பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது 
ஊர்வலத்தை சூலூர் எம்எல்ஏ கந்தசாமி காவி கொடியசைத்து துவக்கி வைத்தார் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் ஆசியுரை வழங்கினார் கணேஷ் மாநகர் மாவட்ட இணை செயலாளர் தலைமை தாங்கினார் சிதம்பரம் பிஜேபி மாவட்ட செயலாளர், சிவகுரு மாநில கொள்கை இறப்புச் செயலாளர் வாழ்த்துரை வழங்கினர் பிரசாந்த் குமார் மாநகர மாவட்ட செயலாளர் வரவேற்புரை ஆற்றினார் மாநகர மாவட்டத் துணைத் தலைவர் ஆனந்த் வாழ்த்துரை வழங்கினர் வழக்கறிஞர் விஜயகுமார் மாநில இணை பொது செயலாளர் சிறப்புரை ஆற்றினார் விழாவில் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால் கலந்து கொண்டு பேசியதாவது:

 சத்ரபதி சிவாஜி காலத்திலேயே இந்து ஒற்றுமைக்காக விநாயகர் உற்சவம் தொடங்கி வைக்கப் பட்டது. அதற்கு பின் இந்த விழா அந்நிய படையெடுப்புகளால் தடைபட்டது. பின்னர் அது பாலகங்காதர திலகரால் 1899ம் ஆண்டு தொடங்கப் பட்டு, 130 ஆண்டுகளாக பாரத தேசம் முழுவதும் மட்டுமல்லாமல், உலகத்தில் எங்கெல்லாம் இந்துக்கள் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்துகொண்டிருக்கிறது. பாரீசில் நடந்த மிக பிரமாண்டமான விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கிறது. அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நட ந்து கொண்டிருக்கிறது. கிருஸ்துவ நாடுகள், இஸ்லாமிய நாடுகள் என எங்கெல்லாம் இந்துக்கள் போய் கோயில் கட்டி வழிபாடு நடத்துகிறார்களோ அங்கெல்லாம் நாம் சுதந்திரமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துகிறோம். ஆனால் இந்துக்களுக்கான ஓரே நாடான பாரத தேசத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
 1947ல் இந்த நாடு மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. இந்துக்களின் கீழ் அரசியலுக்கு கட்டுப்பட்டு நாங்கள் வாழ முடியாது, எங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று ஜின்னா கேட்டார். அதற்காக பாகிஸ்தான் என்ற நாட்டை பிரித்து கொடுத்தார்கள். மதத்தின் அடிப்படையில் நாட்டை பிரித்து கொடுத்த பின்னர், இங்கு இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் சட்டங்களை மதித்து, கட்டுப்பட்டு வாழ்வேன் என்று கூறி இங்கு தங்கினார்கள். உங்களுடன் வாழ முடியாது என்று கூறியவர்கள் அப்போபாதே பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டார்கள். தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் அதிகாரிகளை வைத்து தடை செய்கின்றனர். போலீசாரிடம் அனுமதி கேட்டால் 25 கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். சாமி சிலை செய்வதில் தொடங்கி, அதற்கு வர்ணங்கள் தீட்டுவது, பிரதிர்ஷ்டை செய்வது, விசர்ஜனம் செய்வது என அனைத்துக்கும் கட்டுப்பாடுகள். இந்துக்களுக்கு மட்டும்தான் இதுபோன்ற கட்டுப்பாடுகள்.
ஆனால் மற்ற மத விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப் பது கிடையாது. ஏனென்றால் அவர்களிடம் ஓட்டு இருக்கிறது. இந்துக்கள் ஜாதி, மொழி, அரசியல், மாநிலம் என பிளவுபட்டு கிடக்கிறார்கள். இப்படி பிளவு பட்டிருக்கும் இந்துக்கள், நாத்திகன் என்ற பெயரில் இந்துவாக இருந்துகொண்டு இந்து கடவுள்களை திட்டுபவர்களும் இருக்கின்றனர். இண்டி கூட்டணி என்ற அரசியல் கூட்டணியில் திமுக, காங்கிரஸ், கம்யூனிட்ஸ்கள் உள்பட பலர் உள்ளனர். இந்து விரோத சிந்தனை உள்ளவர்கள், இந்து எதிர்ப்பு சிந்தனை உள்ளவர்கள், பாரத தேசத்திற்கு எதிராக உள்ளவர்கள்.
பங்காளதேஷில் மாணவர்களுக்கான உரிமை போராட்டம் என்று தொடங்கிய பிரச்னை இப்போது இந்துக்களுக்கு எதிரான கலவரமாக மாறியுள்ளது. அங்கு இந்து பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவது, பொது வெளியில் இந்து இளைஞர்கள் கொல்லப்படுவது போன்ற சம்பவ ங்கள் மனதை பதை பதைக்க வைக்கிறது.   
வங்கதேசத்திலிருந்து இருந்து வந்த தீவிரவாதிகள் ஏராளமானோர் தமிழகத்திற்குள் ஊடுறுவியிருக்கிறார்கள், அதுகுறித்து கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் என்று அஸ்ஸாம் முதல்வர் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். தமிழகத்தில் தொழில் நகரங்களாக இருக்கும் கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் தொழிலாளர்களுக்கு பற்றாகுறை இருப்பதால் தீவிரவாதிகள் பெயர்களை மாற்றிக் கொண்டு இங்கே வந்துவிடுகின்றனர்.
பெரிய நகரங்களில் மட்டுமல்லமல் சிறு கிராமங்களில் ஊர்களில் விவசாய கூலிகளாக நடவு வேலைக்கு கூட வந்துவிட்டனர்.  
ஆனால் இந்துக்கள் உறங்கிக் கொண்டிருக்கிறோம்.
நம்மை விழித்தெழச்செய்ய விநாயகர் சதுர்த்தி விழாவை தொடங்கி வைத்தார்கள். அது பின்னர் இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு வித்திட்டது. ஆண்டுதோறும் சம்பிரதாயமாக இந்த விழாவை நடத்தக் கூடாது. இந்துக்கள் ஒற்றுமைக்காக நடத்துகிறோம் என்ற சங்கல்ப்பத்துடன் இந்த விழாவை நடத்த வேண்டும். எத்தனை அடி உயர சிலைகள் வைத்தோம் என்பது முக்கியம் அல்ல. எத்தனை இளைஞர்களை ஒன்றிணைத்தோம் என்று பார்க்க வேண்டும்.
 நம் மதத்ததை பின்பற்ற, வழிபாடு நடத்த அரசியலமைப்பு சட்டம் நமக்கு உரிமை அளித்துள்ளது. 
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் அதிகமான இளைஞர்கள் வரவேண்டும். ஆன்மீகத்தில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் கேட்டுக்கொண்டார். கிருஷ்ணமாச்சாரி மாநகர மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் நன்றியுரை கூறினார். மாவட்டத் தலைவர் குமரேசன், மாநகர் மாவட்ட செயலாளர் விஷ்ணு கணேஷ் ராஜா, இருகூர் சக்திவேல் வர்த்தக அணி பிஜேபி தலைவர், அதிமுக நகர செயலாளர் கார்த்திகை வேலன், மாநகர மாவட்ட இணை செயலாளர் நாகராஜ், பிஜேபி ஒன்றிய துணைத் தலைவர் வெள்ளிங்கிரி. ஒன்றிய செயலாளர் மோகன், ஒன்றிய இணைச் செயலாளர் லீலா கிருஷ்ணன், ஒன்றிய துணைத் தலைவர் கருப்புசாமி உட்பட பல்வேறு மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஆண்கள் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் விசர்ஜன விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Previous Post Next Post