புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக மாநிலச் செயற்குழு கூட்டம் கழகத் தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் தலைமையில் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு வந்திருந்த அனைவரையும் பொதுச்செயலாளர் பேராசிரியர் எ.மு. ராஜன் வரவேற்றார். கழகத்தின் சேர்மன் ஆர்.எல் வெங்கட்ராமன் நோக்க உரையாற்றினார்.
கழகத்தின் தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் தலைமையுரை ஆற்றினார்.
கூட்டத்தின் தொடக்கத்தில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வலியுறுத்தி உழவர்கரை நகராட்சி அலுவலகம் முன்பு
நடைபெற்ற போராட்டத்தைப் பற்றிய நிறை குறைகள் பதிவு செய்யப்பட்டன.
அடுத்த கட்டமாக புதுவை மாவட்டத்தில் உள்ள ஐந்து பஞ்சாயத்துக்கள் மற்றும் புதுச்சேரி நகராட்சி உள்ளிட்ட ஆறு இடங்களிலும் காரைக்காலிலும் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இத்தொடர் போராட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக இளங்கோவன், விமலா பெரியாண்டி, பரந்தாமன், ரஞ்சித் குமார் , சிவகுமாரன், தினகரன், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர் போராட்டங்களுக்கான தேதிகளும் முடிவு செய்யப்பட்டன.
கூட்டத்தில் கீழ் வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
1) புதுச்சேரி மாநிலத்தில் சமீபத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
2) நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் குறைந்தபட்ச 50 விழுக்காடு இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற அரசாணை பிறப்பிக்க பட வேண்டும்.
3) அசிஸ்டன்ட் பணிகளுக்கான நேர்முகத் தேர்வுகளை ஆங்கிலத்தோடு புதுச்சேரி அரசு அங்கீகரித்த உள்ளூர் மொழிகளிலும் நடத்த வேண்டும்.
4) நேரடி பணி நியமனங்களுக்கான வயது வரம்பை ஐந்து ஆண்டுகள் உயர்த்த வேண்டும்.
5) காரைக்கால் பின்தங்கிய மாவட்டமாக அறிவித்து அதற்கான சிறப்பு நிதியை வழங்க வேண்டும்.
6) வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத நிதி உதவி வழங்க வேண்டும்
7) காரைக்கால் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
8) காலியாக உள்ள அரசு பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்ப வேண்டும் மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அணித்தலைவர் ஜி.சி சந்திரன் உதவி செயலாளர் ஆண்டாள், காலாப்பட்டு குமார், இதடவேந்தன்,வேல் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.