கோவை சூலூர் ஒன்றிய தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா மூன்று நாள் நிகழ்ச்சிகள்

கோவை சூலூர் ஒன்றிய தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சூலூர் பள்ளபாளையம் பாரதிபுரம் இருகூர் பட்டணம் கண்ணம்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் 3 அடி முதல் 9 அடி வரை 35 சிலைகள் காலை 5 மணி முதல் சிலைகள் பிரதிஸ்டை செய்யப்பட்டு கணபதி ஹோமம் நடத்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிகளில் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் மாநகர் மாவட்ட இணைச் செயலாளர் கணேஷ் மாநகர் மாவட்ட இணைச் செயலாளர் நாகராஜ் இளைஞர் அணி மாவட்ட இணை அமைப்பாளர் கிருஷ்ணமாச்சாரி பிஜேபி மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஒன்றிய இணைச் செயலாளர் லீலா கிருஷ்ணன் ஒன்றிய துணைத் தலைவர் கருப்புசாமி ஒன்றிய செயலாளர் மோகன் இணை செயலாளர் ஹரி பிரசாத் உட்பட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் பின்பு ஜமாப் இசை நிகழ்ச்சியும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடந்தது அன்னதானமும் நடைபெற்றது  முதல் மூன்று நாட்களுக்கு அருள்மிகு விநாயகருக்கு சிறப்பு பூஜையும் ஆராதனையும் பொது மக்களுக்கு ஆன்மீக போட்டிகளும் முருகன் பாடல் விநாயகர் பாடல் சிவன் பாடல் ஒப்புவித்தல் நிகழ்ச்சியும் சீரும் சிறப்புமாக நடைபெற்று அனைத்து கிளைகளிலும்  விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்று மூன்றாவது நாள் மாநில தலைவர் ஆர்.கோபால் (தினமலர் உரிமையாளர்) சூலூர் அண்ணா கலையரங்கில் விசர்ஜன ஊர்வலம் துவக்கி வைக்க உள்ளார் நிகழ்ச்சியில் சூலூர் ஒன்றிய தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் கிளை  பகுதி விநாயகர் சிலைகளுடன் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும்
Previous Post Next Post