ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு, கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில், ஈரோடு மாவட்டத்தில், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில், கிராம உதவியாளர்களை இரவு காவல் பணி, அலுவலகப் பணி, ரெக்கார்ட் ரூம் பணி, மக்களுடன் முதல்வர் மனுக்களை கணினியில் முடிவு செய்வது உள்ளிட்ட பணிகளில், கிராம உதவியாளர்களை கட்டாயப் படுத்துவதை கண்டித்தும், டிஜிட்டல் கிராப் சர்வே பணி, ஆர்.எஸ்.ஆர் கணினியில் சரி பார்ப்பது போன்ற பணிகளுக்கும் கிராம உதவியாளர் களை கட்டாயமாக பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம், சங்க தலைவர் பெரியசாமி, சங்க செயலாளர் கனகா, பொருளாளர் ராசாத்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. பணி செய்ய கட்டாயப்.படுத்தும் போது, பணிக்கு வராத கிராம உதவியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும் என மிரட்டி, நவீன கொத்தடிமைகளாக நடத்துவதை கண்டித்தும், ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பினர் .இது போன்ற செயல்கள் கிராம உதவியாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியையும், வேதனையும் ஏற்படுத்தி உள்ளது எனவே, ஈரோடு மாவட்ட த்தில் உள்ள பத்து வட்ட நிர்வாகம், உடனடியாக இதுபோன்ற நடவடிக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, கூட்டத்தில் பங்கேற்ற சங்க தலைவர்கள் சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சத்தி பகுதி கிராம உதவியாளர்கள் திரளாக பங்கேற்றனர்.