தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு மனுக்களை பெற்றுக் கொண்டார்


 தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையில் மண்டல அலுவலகத்தில் அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட ஜெஎஸ்நகாில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலை வகித்தார். தெற்கு மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, வரவேற்புரையாற்றினார்.


பிறப்பு இறப்பு சான்றிதழ் முகவாி மாற்றம் புதியகுடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை இணைப்பு கட்டிட அனுமதி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மனுக்களை பெற்றுக்கொண்ட பின் மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின் அவரது உத்தரவிற்கிணங்க மழை நீர் தேங்கிய பகுதியில் புதிய கால்வாய் பணிகள் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊராட்சி உள்ளிட்ட புறநகர் பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் படி குறை கேட்பு முகாம் நடைபெறுவதை போல் மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு வாரமும் ஓவ்வொரு மண்டலம் பகுதியில் நடத்தப்பட்டு இந்த மண்டலத்தில் நடைபெறுகிறது. அதனடிப்படையில் இந்த பணிகள் தொடர்கின்றன. வடகிழக்கு பருவமழை வருவதை யொட்டி முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் ஏற்கனவே அதிகாாிகளுடன் ஆலோசனை நடைபெற்றுள்ளது. குறிப்பாக கோரம்பள்ளம் குளம் நிறைந்து கடலுக்கு அந்த மழைநீர் வரும் பகுதியான அத்திமரப்பட்டி முள்ளக்காடு போன்ற பகுதிகளில் இருக்கின்ற வழித்தடத்தை முழுமையாக சீரமைக்க உத்தரவிட்டுள்ளேன். என்று கூறினார்

Previous Post Next Post