ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய்மை பாரத இயக்கம்( ஊரகம்) பகுதி- 2, தூய்மையே சேவை இயக்கம் - 2024, திட்டத்தின் கீழ், பிளாஸ்டிக் ஒழிப்பு, திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவக்குமார் தலைமை தாங்கினார், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உமாசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார், ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் வகாப், ராதாமணி, ஊராட்சி மன்ற துணை தலைவர் ரமேஷ், வார்டு உறுப்பினர் கள்:- சுகுமார் வடிவேலு,சாவித்திரி ரங்கராஜ், வளர்ச்சிக் குழு உறுப்பினர் ராசு, மற்றும் கல்லூரி துறை தலைவர் கள், பேராசிரியர்கள்,திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர், கல்லூரி யில் பயிலும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர்கள் ஆங்காங்கே உள்ள குப்பைகளை சேகரித்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒப்படைத்தனர், பேரணி அரசு கலைக் கல்லூரி முதல் ஊராட்சி மன்ற அலுவலகம் வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பேரணியாக அணி வகுத்து தூய்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு, குறித்த பதாகைகள் ஏந்தி அணி வகுத்து சென்றனர், முடிவில் ஊராட்சி செயலர் ஆர். குமார் நன்றி கூறினார்.