விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர்,தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம், கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை

கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை காவல்துறை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலை வைத்து வழிபடுமாறு அமைப்புகள் மற்றும் பொது மக்களை கேட்டு கொண்டுள்ளார் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அமைப்புகளால் நிறுவப்படும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத சிலைகள் மட்டும் கீழ்கண்ட இடங்களில் விசர்ஜனம் செய்ய தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம், கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.முத்தண்ணன்குளம்
2. பவானி ஆறு (சிறுமுகை, பழத்தோட்டம், எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்ரமணியர் கோவில் மற்றும் தேக்கம்பட்டி).
3.அம்பராம்பாளையம் ஆறு (ஆனைமலை, காளிப்பக் கவுண்டன்புதூர் மற்றும் மயிலாடுதுறை).
4. நொய்யல் ஆறு (ராவுத்தூர் பிரிவு).
5. ஆச்சான் குளம், நீலாம்பூர்.
6. உப்பாறு (ஆனைமலை முக்கோணம் அருகில்).
7. நடுமலை ஆறு, வால்பாறை.
8. சாடிவயல்.
9. வாளையார் அணை.
10. குறிச்சி குளம்.
11. குனியமுத்தூர் குளம்.
12. சிங்காநல்லூர் குளத்தேரி.
13. வெள்ளக்கிணறு குளம்.
14. நாகராஜபுரம் குளம்,
15. பிஏபி வாய்க்கால், செஞ்சேரி பிரிவு.
16. சாமளாபுரம் குளம் (திருப்பூர் மாவட்டம்).
17. பிஏபி வாய்க்கால், கெடிமேடு (திருப்பூர் மாவட்டம்).மேற்கண்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
Previous Post Next Post