தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி மாநில தலைவர் ஆவடி. ஸ்டாலின் அறிக்கை
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநின்றவூர் கைலாசநாதர் கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் பாதையை சமூக விரோதிகள் பலர் திட்டமிட்டு வேலிகள் அமைத்து கோயிலுக்குள் பக்தர்கள் செல்லாத வண்ணம் இருந்தது தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் முயற்சியில் மாநகராட்சி ஆணையர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அந்த சாலை நகராட்சிக்கு சொந்தமான சாலை என்றும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் அந்த சாலையில் சமூக விரோதிகளால் போடப்பட்ட வேலியை அகற்றி பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு எந்த இடையூறுதலும் இல்லாமல் நடவடிக்கை எடுத்தனர் இதற்காக பாதுகாப்பு கொடுத்த காவல்துறை அதிகாரிகளுக்கும் நகராட்சி ஆணையருக்கும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தமிழ்நாடு இந்து சேவா சங்க அமைப்பின் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் மாநில தலைவர் ஆவடி.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்