அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்து அதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளார்- அமைச்சர் முத்துச்சாமி பேச்சு...
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான மாபெரும் வங்கி கடன்கள் வழங்கும் முகாமை மதுரையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார். அதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் குழுக்களுக்கு ரூ. 2,735 கோடி கடன் வழங்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் குழுக்களுக்கான கடன் வழங்கும் முகாமில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கோவை மாவட்டத்தில் உள்ள 1727 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுமார் ரூ.96.47 கோடி கடன்களை வழங்கினார். அதனை தொடர்ந்து மகளிர் குழுக்களுக்கு அதிகளவு கடன் வழங்கிய வங்கி நிர்வாகத்தினருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் முத்துசாமி கூறும் போது ,கோவை மாவட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு ரூ.96.47 கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஒருங்கிணைத்து பணியாற்றிய ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் சென்று பார்க்கிறோம், அவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.காரணம் இதன் மூலம் மகளிர் தங்கள் எதிர்காலத்தை தாங்களே நிர்ணயித்து கொள்கின்றனர். மேலும் மகளிர் சுய உதவி குழு கலைஞர் கொண்டு வந்த மகத்தான திட்டம், தற்போதிய முதல்வர் மகளிருக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். சுய உதவி குழுக்களை பொருத்தவறை முதல்வர் தனி கவனம் செலுத்துகிறார்.
ஒவ்வொரு ஆய்வு கூட்டத்தின் போதும் குழுக்களின் நிலைபாடு என்ன? எப்படி இயங்குகிறது? பயனுள்ள வகையில் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிவார். முதல்வரே இவ்வளவு அக்கரையாக கவனிக்கும் போது அதனை மகளிர் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் இதுவரை 11 நிறுவனங்களுடன் தமிழகத்தில் முதலீடு செய்ய ரூ. 4 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடியான வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து பார்ப்போருக்கு நமது திட்டங்கள் பெரிய திட்டங்களாக தெரிகிறது என தெரிவித்தார்.மேலும் இன்று நடைபெற்ற உயர்வுக்குப் படி நிகழ்ச்சியில் 407 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் 210 மாணவர்கள் அரசு கலை அறிவியல்,மற்றும் தனியார் கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.