3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த  சேவூர் வாலீஸ்வரர் கோவிலில்  கும்பாபிஷேக விழா கோலாகலம் 

 திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த  சேவூர் வாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் 10000 - க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் வைப்புத் தலமாகவும், நடுச்சிதம்பரம் என்றும் அழைக்கப்படும் சேவூர் அறம்வளர்த்த நாயகி உடனமர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் சுமார் 3000 ஆண்டுகள் பழைமையானது.இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம்  இன்று நடைபெற்றது.இதில் ராஜகோபுரம், வாலீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி கல்யாணசுப்பிரமணியர், சிவகாமி அம்பாள் உடனமர்  நடராஜப் பெருமாள் கனக சபை, பரிவார தெய்வங்கள் உள்ளிட்ட விமான கலசங்கள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மூலவர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆன்றோர்கள் மக்கள் சான்றோர்கள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இக்கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் கடந்த 2 - ந்தேதி காலை தொடங்கியது.  இதையடுத்து, நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகளும் மூன்று கால பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை 4-ம் கால யாக பூஜை நடைபெற்றது.  இதையடுத்து, யாகசாலை மற்றும் கோயில் வளாகத்தை சுற்றி சிவாச்சாரியர்கள் தீர்த்த கலசங்களை தலையில் சுமந்தவாறு தீர்த்த குட புறப்பாடு நடைபெற்றது.

இதையடுத்து,  கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன 57-ம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக சாமிகள் தலைமையில் சிவாச்சாரியர்கள் ராஜகோபுரம், வாலீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி, கல்யாணசுப்பிரமணியர், சிவகாமி அம்பாள் உடனமர்  நடராஜப் பெருமான் கனக சபை, பரிவார தெய்வங்கள் உள்ளிட்ட விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மூலவர் மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.  

 கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சேயூர் பகுதிகளில் பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தது.

Previous Post Next Post