ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள, பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில், 24-வது பட்டமளிப்பு விழா, கல்லூரியின் சேர்மன், டாக்டர் எஸ்.வி. பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில், ஜோகோ கார்ப்பரேசன் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் பத்மஸ்ரீ,ஸ்ரீதர் வேம்பு கலந்து கொண்டு, பட்டமளிப்பு விழா விழா பேரூரை நிகழ்த்தியும், பட்டம் பெற்ற மாணவ, மாணவியருக்கு, பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில், இக்கல்லூரியில், உணவு தொழிற் நுட்ப துறையில் பி.இ. பொறியியல் படிப்பில், கலைமாமணி மற்றும் முருகேசன் தம்பதியினரின், புதல்வியான செல்வி. எம். ஷஞ்சு, அண்ணா பல்கலைக்கழக அளவிலான தேர்வில், உணவு தொழில்நுட்ப துறையில் தங்க பதக்கம் பெற்றதை அடுத்து, பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு மாணவி ஷஞ்சுவிற்கு, தங்க பதக்கத்தை அணிவித்து,பட்டம் வழங்கி கெளரவித்தார்.
அப்போது விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், கல்லூரி பேராசிரியர்கள்,துறை தலைவர்கள் மற்றும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள்,மாணவ,மாணவியர்கள் கரவொலி எழுப்பி, மாணவி எம். ஷஞ்சுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மாணவி எம்.ஷஞ்சு வின் தாயார் கலைமாமணி, தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில், ஈரோடு மாவட்ட உதவி செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.