திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக, திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக, கொங்குநகர் பகுதி கழகம், 20-வது வார்டு எஸ்.வி.காலனியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கழகத் தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் துணைசபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன்,
கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான.செ.ம.வேலுச்சாமி, கழக மகளிர் அணி துணைச் செயலாளர் நூர்ஜகான், கூடலூர் ராமமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து கழக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய கழக செயலாளருமான கே.என்.விஜயகுமார் முன்னிலை வகித்தார். 20 வது வட்டக்கழக செயலாளர் எம்.மணிகண்டன் தலைமை தாங்கினார். கொங்குநகர் பகுதி கழக செயலாளர்பி.கே.முத்து வரவேற்புரையாற்றினார்.
கழகத் தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் துணைசபாநாயகருமான
பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசும்போது கூறியதாவது:
அண்ணாவின் சிந்தனைகள் உலகம் முழுவதும் தமிழர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியது. அவரது எழுச்சியால் தான் தற்போது வரை காங்கிரஸ் தமிழகத்தில் தனித்து நிற்க முடியாமல் மற்றொருவர் முதுகில் சவாரி செய்து வருகின்றனர். அண்ணாவின் வழியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, தற்போது புரட்சித்தமிழர் எடப்பாடியார் பயணித்து வருகின்றனர். அடிமட்ட தொண்டனாக அதிமுகவில் பயணித்து தற்பொழுது முதல்வர் வரை உயர்ந்துள்ளார். சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த எடப்பாடியார் நான்கரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தந்துள்ளார், நீட் தேர்வால் கிராமபுற மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்து அவர்களையும் இலவசமாக மருத்துவ படிப்பில் படிக்க வைத்து சாதனை படைத்தவர் தான் எடப்பாடியார். புரட்சித்தமிழர் எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் சாதாரண மக்களுக்கு சென்றடையும் திட்டமாக உள்ளது. ஆடு, கோழி வளர்ப்பு திட்டம், பசு வளர்ப்பு திட்டம், நெசவாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம், போன்ற அனைத்து திட்டங்களையும் சாதாரண மக்களுக்கு கொண்டு சேர்த்த மாபெரும் தலைவர் எடப்பாடியார், இன்றைய திராவிட ஆட்சியில் கஞ்சா, அபின், போன்ற போதை வஸ்துக்கள் விற்பனையால் தமிழகம் இந்தியாவின் போதை மாநிலமாக மாறியுள்ளது. தமிழகத்திலிருந்து தான் இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது, இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட யாரும் மறுக்க முடியாது. கடந்த மூன்று ஆண்டு காலம் புரட்சித்தமிழர் எடப்பாடியார் தமிழகத்தில் போதை விற்பனை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மது ஒழிப்பு மாநாட்டிற்கு திமுகவை அழைப்பது என்பது குடிசை மேல் நெருப்பை வைப்பதற்கு சமம். மீண்டும் தமிழக மக்களுக்கு விடிவு காலம் புரட்சித் தமிழர் எடப்பாடியார் மீண்டும் முதல்வர் ஆவார்; சிறப்பான ஆட்சியை மக்களுக்கு தந்திடுவார் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பேசினார்.
கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ.ம.வேலுச்சாமி பேசும்போது கூறியது: அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அனைத்து தொகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களுக்காக ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது அண்ணாவால் தான் உருவானது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, தற்பொழுது புரட்சித் தமிழர் எடப்பாடியார் ஆகியோர் அண்ணாவின் வழியில் அதிமுகவை இயக்கி வருகின்றனர். பெரும் தொழிலதிபர்கள், லட்சாதிபதிகள், மிட்டா மிராசுதாரர்கள் மட்டுமே ஆளுமையில் இருக்க முடியும் என்று சூழலை மாற்றி ஏழை மக்களுக்காக பாடுபடும் எவராக இருந்தாலும் ஆளுமையில் அமரலாம் என்ற சமுதாய புரட்சியை ஏற்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா. நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்ற உறுப்பினராகி மாபெரும் சமுதாயப் புரட்சியை உருவாக்கினார். இன்று வரை சகாப்தமாக திகழ்கிறார். 1969இல் முதல்வராகி தமிழ்நாட்டுக்கு பெயர் வைத்து இரு மொழி கொள்கையை கடைப்பிடித்து சகாப்தத்தை ஏற்படுத்தினார். அண்ணாவின் மறைவிற்கு கின்னஸ் சாதனையில் இடம் பெறும் அளவிற்கு லட்சக்கணக்கானோர் அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். அண்ணாவின் மறைவிற்குப் பிறகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தயவால் கருணாநிதி முதல்வரானார்; அண்ணாவின் கொள்கைகளை மறந்து தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் இன்றுவரை இருக்கின்ற கட்சி தான் திராவிட முன்னேற்ற கழகம். இந்தியாவிலேயே ஊழலுக்காக சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு கலைக்கப்பட்ட ஆட்சி தான் திமுக. அண்ணாவின் கொள்கைகளை கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி யாரும் பின்பற்றவில்லை. தற்போது வரை புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக மட்டும் தான் பின்பற்றி வருகிறது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர். பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளுடன் அவர் முகம் பதித்த கொடியுடன், அவர் பெயருடன் இருக்கக்கூடிய ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல்வேறு திட்டங்களை ஏழ எளிய மக்களுக்கு கொண்டு வந்தார், பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் பல்வேறு திட்டங்களை தந்தார். இந்தியாவில் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த மடிக்கணினி வழங்கி உலகளாவிய கல்வியை கொடுத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். ஏழை எளிய மாணவர்களுக்கு தாயாக இருந்து அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அவரது மறைவுக்குப் பின்னர் தொண்டனாக கட்சியில் இணைந்து, பல்வேறு பொறுப்புகளை வகித்து விவசாய குடும்பத்தைச் சேர்ந்த புரட்சித் தமிழர் எடப்பாடியார் முதல்வராகி அண்ணாவின் கொள்கையை நிரூபித்துக் காட்டினார். நான்காண்டு காலத்தில் அவிநாசி அத்திக்கடவு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை தந்தவர் எடப்பாடியார். கொரோனா காலகட்டத்தில் அனைவருக்கும் இலவசமாக உணவு தந்தவர் எடப்பாடியார், வீடு வீடாகச் சென்று அனைவருக்கும் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு தமிழகம் சிறப்பான முறையில் ஆட்சி நடத்தியவர் எடப்பாடியார். திமுகவினர், காங்கிரஸார், கம்யூனிஸ்ட் கட்சியினர் என்று பேதம் பார்க்காமல் தமிழக மக்களுக்கு நன்மை செய்தவர் எடப்பாடியார். அண்ணா பிறந்தநாள் விழா, புரட்சித் தலைவர் பிறந்தநாள் விழா, புரட்சித்தலைவி பிறந்தநாள் விழாக்களில் அதிமுகவினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர், கிராமப்புற மாணவர்களும் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் சாதனையைப் படைத்தவர் எடப்பாடியார். இதுபோன்று எந்த தலைவருக்கும் எந்த கட்சியிலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில்லை. அதிமுக புரட்சித்தமிழர் எடப்பாடியாரின் கட்டுக்கோப்பில் உள்ளது. இதை எவராலும் அசைத்து விட முடியாது. தமிழகத்தில் எந்தக் கூட்டணி இல்லாமல் சாதித்துக் காட்டியது அதிமுக மட்டும் தான், வேறு எவராலும் முடியாது, பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கண்ட கனவை வரும் 2026 இல் மீண்டும் எடப்பாடியார் முதல்வராகி சாதித்துக் காட்டுவார் என்று முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி பேசினார்.
இந்நிகழ்வில்,கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்சி. சிவசாமி, திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணை செயலாளருமான சு.குணசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்டக் கழக அவைத் தலைவருமான வெ.பழனிச்சாமி மாவட்ட கழக இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர் ,மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு,கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர் ஹரிஹரசுதன்,வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் சுப்பிரமணியம், தொட்டிபாளையம் பகுதி கழக செயலாளர் வேலுமணி,மாவட்ட விவசாய அணி செயலாளர் கலைமகள் கோபால்சாமி,மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வேல்குமார்சாமிநாதன், மாவட்ட மகளிரணி செயலாளர் சுந்தராம்பாள், மாவட்ட மாணவரனி செயலாளர் சதிஷ்,மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல் ,மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் ரத்தினகுமார், மாவட்ட மீனவரணி செயலாளர் சாமிகனேஷ், கழக நிர்வாகிகள் கனகராஜ், பேச்சாளர் பாரதிப்பிரியன், உள்பட பலர் பங்கேற்றனர்.