தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு துணை போவதா ? ரங்கசாமிக்கு புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் கண்டனம்

புதுச்சேரி மாணவர்களுக்கு 50% மருத்துவ இடங்களை பெற்று தராமல் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு துணை போவதா ?
 ரங்கசாமிக்கு புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் கேள்வி?

புதுச்சேரி மாணவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற்று தராமல், மருத்துவம் படிக்க துடிக்கும் மாணவர்களின் கனவில் மண்ணை அள்ளி போட்டு விட்டு தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு துணை போவது ஒரு முதல்வருக்கு அழகல்ல. நம்மை சுற்றியுள்ள மாநிலங்களான தமிழ்நாடு,ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் 50 சதவீத மருத்துவ இடங்களை பெற்றிருக்கிறார்கள் . ஆனால் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி ஏன் தயங்குகிரார் என்று தெரியவில்லை. இது ரங்கசாமிக்கே வெளிச்சம். மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்று மக்கள் மத்தியில் பரவலாக பேசும் நிலையில் , அக்கறை இருப்பது போல் நடிக்கிறாரா என்று பேச ஆரம்பித்து விடுவார்கள். ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் மக்கள் செல்வாக்கை இழந்த ரங்கசாமி , மாணவர்கள் விஷயத்தில் அவர்களது மருத்துவ கனவை சிதைப்பது போல் நடந்து கொள்வது எதிர்காலத்தில் மாணவர்கள் ,மற்றும் இளைஞர்கள் மத்தியிலும் முத்ல்வர் ரங்கசாமி செல்வாக்கு இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். வெளியில் இருந்து வந்து நமது மாநிலத்தில் அனைத்து வசதிகளையும் பெற்று கொண்டு சம்பாதனை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அனுமதியை ரத்து செய்ய.வேண்டும். மூன்று தனியார் கல்லூரிகளில் உள்ள 650 இடங்களில் புதுச்சேரி மாணவர்களுக்கு 325 மருத்துவ இடங்களை ஒதுக்க வேண்டிய இடத்தில் வெறும் 240 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் நான்கு நிகர் நிலை மருத்துவ கல்லூரிகளில் புதுவை மாணவர்களுக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. இது புதுச்சேரி அரசின் திரமையின்மையை காட்டுகிறது.
ஆகவே மாணவர் நலன் கருதி தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50% மருத்துவ இடங்களை புதுவை அரசு கேட்டு பெறவேண்டும். அல்லது இது சம்பந்தமாக சட்டமன்றத்தை கூட்டி, புதுச்சேரி மாணவர்களுக்கு 50% மருத்துவ இடங்களை தனியார் கல்லூரிகள் கொடுக்க வேண்டும் என்றும் இல்லையேல், கொடுக்கப்பட்ட அனுமதி மறு பரிசீலனை செய்யப்படும் என்ற சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்
 இந்த விஷயத்தில் ரங்கசாமி தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது. புதுச்சேரி மாநில மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50% மருத்துவ இடங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் என்ற முறையில் புதுவை அரசை கேட்டுக்கொள்கிறேன். இல்லையேல் மாணவர்கள் நலன் கருதி அவர்களுக்கு ஆதரவாக அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்
 என்று புதுவை அரசிற்கு எச்சரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
Previous Post Next Post