சென்னை ஆவடி மாநகராட்சி ஆணையருக்கு தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் மாநில தலைவர் ஆவடி ஸ்டாலின் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் அதில் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட நந்தவன மேட்டூர் பகுதியில் ஸ்ரீ வினை தீர்த்த வினாயகர் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் அருகாமையில் குப்பைகளை கொட்டி மிகவும் மோசமான நிலை உருவாகி வருகிறது . தின திடக்கழிவு வரி வசூல் செய்தும் வீடுகளில் இருந்து குப்பைகளை எடுக்காமல் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொண்டு வந்து கோவில் அருகாமையில் கொட்டுகின்றனர் அப்பகுதியில் இருக்கும் தெரு நாய்கள் இந்த குப்பைகளை இழுத்து வந்து கோவிலுக்குள்ளும் , தெருகளிலும் போடுகின்றன மாலை நேரங்களில் அப்பகுதியில் நடமாடும் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அதே போலவே இரண்டாம் படை வீடான ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் விவேகானந்தா பள்ளிக்கூடம் உள்ளது .இதன் அருகாமையிலும் அதிக குப்பைகளை பொதுமக்கள் கொண்டு வந்து கொட்டுகின்றனர் இதே போலவே கோவில்கள் இருக்கும் பகுதிகளில் தொடர்ந்து இந்த செயல் நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளதால் மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்தி நோய் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து அந்த பகுதிகளில் குப்பை கொட்டாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு இந்து சேவா சங்கதின் சார்பாக மாநகராட்சி ஆணையரை கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு தனது மனுவில் தெரிவித்துள்ளார்