இன்றைய கல்வி எவ்வாறு இருக்க வேண்டும்? அரவிந்தன் நீலகண்டன் பேச்சு

 திருப்பூர், அறம் அறக்கட்டளை சார்பில், இன்றைய கல்வி எவ்வாறு இருக்க வேண்டும்? என்ற தலைப்பில் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அரவிந்தன் நீலகண்டன் கலந்துகொண்டார்.அரவிந்தன் நீலகண்டன் பேசியதாவது…

”நம் பாரத நாடு சுதந்திரமடைந்து செங்கோட்டையில் மூவர்ணக் கொடி பறந்தாலும், மனதளவில் ஆங்கிலேயர்களின் கல்வியே நிறைந்து, அவர்களது குமாஸ்தா கல்வி முறையிலேயே உழன்று, வெளிநாட்டிற்கு சென்று வேலை பெறுவதே லட்சியமாகவும் தாய்நாட்டின் அருமை பெருமைகளை மறந்தும் முழுமையாக அதனைப் பற்றி  அறியாமலும் வாழ்கிறோம். 

கல்வி என்பது கலை, ஞானம், மெய்ஞானம் என்று உலக விஷயங்களையும் இறை தத்துவத்தையும் அறியும் ஒன்றாக இருக்க வேண்டும்.  ஒரு நாட்டின் சரித்திரம் என்பது வாழும் அல்லது தற்போது வாழ்ந்து முடிந்த ஒருவரின் தனிப்பட்ட வாழ்வியலை பற்றி குறிப்பிடும் குறிப்பேடாக இல்லாமல் அந்த நாட்டின் பாராம்பரியத்தையும் பண்பாட்டையும், அதற்கே உரித்தான மண்ணின் மாண்பையும் விவரிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.

  ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் புராதன கோவில்களுக்கான ஸ்தல புராணங்கள் யாவும் அந்த ஊரின் அருமை பெருமைகளை அறிவிக்குமாறு அந்த மண்ணின் சிறப்பை கூறுவதாக இருப்பதைக் காண வேண்டும். 

நமது பாரத தேசத்தின் தர்மமும் சத்தியமும் அணையா நெருப்பாக, போற்றி காக்கும் கல்வி முறையை மாணவர்களுக்கு போதிக்கவும், அதிலிருந்து அவர்கள் பெறும் உயிர்ப்பின் பயனானது, உலகத்திற்கே நல்லதொரு தத்துவவியல் கோட்பாட்டினை வழங்கும் கல்வியாக இருக்க வேண்டும்”. இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post Next Post