சூலூர் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் கோவை எம்பி தெற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

சூலூர் நகர திமுக சார்பில் பொது  உறுப்பினர் கூட்டம் சூலூர் எஸ். ஆர்  எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார் கோயமுத்தூர் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் முன்னிலையில் நடைபெற்ற நகர பொது உறுப்பினர் கூட்டத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை பெற்ற பூத் நிர்வாகிகளுக்கு ரொக்க பரிசம், நினைவு பரிசு வழங்கப்பட்டது . தொடர்ந்து கழக உறுப்பினர்களின் இல்லங்களில் ஏற்பட்ட மறைவுக்கும்,  கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த குடும்பத்தினருக்கும் கேரளாவில் மழை வெள்ளத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு நன்றியறிவிப்பு மற்றும் வாழ்த்து  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் நடைபெற்றது. நகர அவை தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர செயலாளர் கௌதமன் வரவேற்புரையாற்றினார் சூலூர் பேரூராட்சி தமிழ்நாட்டின் முதன்மை பேரூராட்சியாக விருது பெற்றதற்கு பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன் திராவிட மாடல் ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வளர்ச்சிப் பணிகளைப் பற்றி கூட்டத்தில் எடுத்து கூறினார். கோவையில் வைக்கப்பட்டிருக்கின்ற கலைஞர் நூற்றாண்டு சிலை அமைப்பதற்கு பணியாற்றிய பசுமை  நிழல்  விஜயகுமாருக்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் வாழ்த்துக்களை தெரிவித்தார்  மக்களவை உறுப்பினர் ராஜ்குமார் கூறுகையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு களப்பணி ஆற்ற வேண்டும், உங்கள் பகுதியில் எந்த ஒரு தேவையாக இருந்தாலும் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் பகுதியில் வளர்ச்சிக்கு உழைப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்று தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். நிகழ்ச்சியில்  சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார், மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் பிரபு ,துணைச் செயலாளர் மணி, ஜெயகுமாரி, மணிகண்டன், பொருளாளர் அங்கமுத்து, மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் வார்டு கழக செயலாளர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கிளை கழக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் என 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post