அவினாசி-அத்திக்கடவு போராட்டம் குறித்து முடிவெடுக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிகாரம் வழங்கி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

அவினாசி-அத்திக்கடவு போராட்டம் குறித்து முடிவெடுக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிகாரம் வழங்கி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவினாசி-அத்திக்கடவு திட்டம் துவக்கப்படாமல் இருப்பதைக்கண்டித்து வரும் 20-ம் தேதியிலிருந்து பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் தலைமையில் தொடர் உண்ணாவிரதம் என அறிவித்திருந்தார்
இதுகுறித்து பதிலளித்த அமைச்சர் முத்துச்சாமி திட்டம் முடிவுற்று சோதனை ஓட்டம் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்
அதன் தொடர்ச்சியாக ஞாயிறன்று (10.08.2024) அவினாசி கொங்கு மஹாலில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் மற்றும் அவினாசி-அத்திக்கடவு போராட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
அமைச்சர்.முத்துசாமி வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தை தள்ளிவைப்பதா அல்லது அறிவித்த தேதியில் நடத்துவதா என்று சூழ்நிலையைப் பொருத்து முடிவெடுக்கும் அதிகாரம் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது
அமைக்கப்பட்டுள்ள 6 நீரேற்று நிலையங்களின் தற்போது செயல்முறையைக் கண்டறிய விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் தலைமையில் 20 பேர் கொண்ட குழு அமைப்பதாக தீர்மானிக்கப்பட்டது
விடுபட்ட 1400 குளம்,குட்டைகளையும் சேர்த்து நீர்நிரப்ப 2-து திட்டத்திற்கு அரசாணை வெளியிட தமிழக அரசை கேட்டுக்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
ஒவ்வொரு ஆண்டும் அவினாசி-அத்திக்கடவு திட்டத்தின் மூலம் குளம்,குட்டைகளில் நீர் நிரப்புவது,குளங்களை பராமரிப்பது,குழாய்களை பராமரிப்பது உள்ளிட்டவற்றின் கீழ் அரசு விதிகளின்படி, உரிய விதிகளை வரையறுக்க விவசாயிகளோடு கலந்தாலோசித்து அரசு விதிகளை வரையறுக்க வேண்டுமென இக்கூட்டம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது
விவசாய அணி மாநில தலைவர் ஜி.கேநாகராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா கெளதம்,விவசாய அணியின் மாநில செயலாளர்கள் மௌன குருசாமி,விஜயகுமார் மாநில துணைத்தலைவர்கள் குமரேசன், பாண்டியன்,விவசாய அணி மாவட்ட தலைவர் விஜயகுமார்,அவினாசி-அத்திக்கடவு உறுப்பினர்கள் அவினாசி பொன்னுக்குட்டி, வேலுசாமி,தொரவலூர் சம்பத், சுப்பிரமணியம்,களம் சதீஷ், பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ஸ்ரீ நந்தகுமார், மண்டல் தலைவர் தினேஷ்குமார் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள்
Previous Post Next Post