புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
வில்லியனூர் சாலை,ஜவஹர் நகர் சந்திப்பில் உழவர்கரை நகராட்சி மற்றும் பிபிஏ அலுவலகம் எதிரில், கழகத் தலைவர் பேராசிரியர் மு. ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கழக சேர்மன் ஆர்.எல். வெங்கட்டராமன் , பொதுச்செயலாளர் எ .மு.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் மாநில நிர்வாகிகள், அணித்தலைவர்கள், மற்றும் கழக உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று கையில் கோரிக்கை பதாகைகள் கொடிகளுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி கோஷமிட்டு சென்று உழவர்கரை நகராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பந்தலில் கலந்து கொண்டனர் மாநில நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலின் அவசியம் குறித்து வலியுறுத்தி பேசினர்.இதில் இறுதியாக பேசிய கழகத் தலைவர் பேராசிரியர் மு. ராமதாஸ் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மக்களின் அடிப்படை அதிகாரம் முடக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி பிறந்த தினம் அன்று அவர் மக்களுக்கு அதிகாரம் அளித்து உள்ளாட்சி அமைப்பை கொண்டு வந்த தலைவர் ஆவார் அவருக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகிய இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள் ஆனால் அவர் கொண்டு வந்த உள்ளாட்சி அதிகார அமைப்பை புதுச்சேரியில் இவர்கள் இருவரும் சேர்ந்து முடக்கி வைத்துள்ளனர் என குற்றம் சாட்டினார்.