களத்தில் இறங்கிய வீர இந்து சேவா அமைப்பினர் உடனடியாக சாலையை சீரமைத்து தந்த நெடுஞ்சாலை துறையினர்

கோவை சூலூர் காவல் நிலையம் அருகில் உள்ள ரயில்வே பீடர் ரோடு திரும்பும் இடத்தில் ஆர்டிசி கான்கிரீட் கலவை சாலைகளில் கொட்டி கலவை திட்டுகளாக மாறி இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில நெடுஞ்சாலை துறைக்கும் வீர இந்து சேவா சார்பில் புகார் மனு கொடுத்தின் பேரில் மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தனலட்சுமி,மோகன்ராஜ், மற்றும் செந்தில்குமார் தலைமையில் மாநில நெடுஞ்சாலைத்துறை தொழிலாளர்கள் அந்த கலவை திட்டுகளை ஜேசிபி மூலம் தகர்த்தெடுத்து பொதுமக்கள் மற்றும் அப்பகுதி வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு விபத்து ஏற்படாத வண்ணம் செயலாற்றிய மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனைவருக்கும் வீர இந்து சேவா சார்பாகவும், சூலூர் பொதுமக்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது மேலும் சூலூர் தாசில்தார் அலுவலகம் அருகில் உள்ள நான்கு முனை சாலைகளை அகலப்படுத்தி, நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி அங்கு வேகத்தடைகள் அமைத்து கொடுக்குமாறும் வீர இந்து சேவா சார்பாக கேட்டு கொள்ளப்பட்டது
Previous Post Next Post