தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் அறிக்கை

வாசிப்பை முதல்வர் நேசிக்கிறாராம் 
ஒரு பத்திரிக்கை தலைப்புச் செய்தி எழுதுகிறது 
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆயிரத்து 30 நகர்புற நூலகங்கள் ..
அதனுடைய நூலகர்கள் இன்னும் கடைசி மட்ட ஊழியர்களாகவே இருக்கிறார்கள்.. 
அவர்களுடைய சர்வீசுக்கு தகுந்த மாதிரியான அளவு ஊதியம் உயர்த்தப்படவில்லை 
நூலகங்களின் தரமும் உயர்த்தப்படவில்லை 
எத்தனையோ கோடிகளை எங்கு எங்கோயோ கொண்டு கொட்டுகின்ற தமிழக அரசு 
படிப்புக்கும் வாசிப்புக்கும் கிராமத்து வாசகனை ஊக்குவிக்க இதில் கவனம் செலுத்துமா? 
இன்றைக்கு எல்லாமே ஆன்லைன் எல்லாமே செல்போன் எல்லாமே எலக்ட்ரானிக் என்றாலும்..
நூலகங்கள் அதன் பங்கை செய்யத்தான் செய்கிறது 
நூலகங்களை நாம் கைவிட்டு விட்டோம் என்றால் கிராமத்து சாதாரண ஏழை மக்களை நாம் உயர்த்துவது சாத்தியமே அல்ல 
தமிழக முதல்வர் சிந்திப்பாரா? இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார் 
Previous Post Next Post