சொந்த மாநிலம் தவிக்கிறது .. கரிசனம் அண்டை மாநிலத்தின் மீதா?
மீட்பு பணிகள் விரைந்து நடைபெற நம்முடைய முழு ஒத்துழைப்பையும் நல்கிடுவோம்.!
ஆனால் அதே சமயம், வரும் முன் காப்போம் என்ற கொள்கையை கடை பிடிக்காமல் போனதன் விளைவை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது.
கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்பதை ஏற்கனவே கேரளா அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது மத்திய அரசு !!
ஏதோ சம்பிரதாயத்திற்காக ஒரு முறை அல்ல !!
நான்கு முறை !!
ஜூலை 23ஆம் தேதியே முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த நான்கு நாட்களுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது...
எல்லாவற்றையும் விட ஜூலை 26 ஆம் தேதி அன்று கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்...
இத்தனை எச்சரிக்கைகளுக்குப் பிறகு, விரைவாக செயல்பட்டு மக்களை ஏன் இடமாற்றம் செய்யவில்லை..
ஆரஞ்சு ஆலர்ட்டு தான் கொடுத்தார்கள், ரெட் அலர்ட் கொடுக்கவில்லை என்று ஆயிரம் மழுப்பும் காரணங்கள் சொன்னாலும், ஒரு சிறு அலட்சியத்தால் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.
ஏற்கனவே மாதவ் காட்கில் அவர்கள் தலைமையான குழு பரிந்துரைத்த ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை 142 சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களாக பிரித்து, அவற்றையும் 1,2,3 என்ற வகைப்படுத்தியது.
அதில் ஒன்றாவது பிரிவில் வரும் பகுதிகளில் எந்தவிதமான கட்டுப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று எச்சரித்துள்ளது.
அப்படிப்பட்ட ஒன்றாவது பிரிவில் வயநாடு அடக்கம் !
ஆனால் அங்கே எஸ்டேட்டுகளும் ரிசார்ட் போன்ற வர்த்தக ரீதியான முறையற்ற சட்டவிரோத கட்டுமானங்கள் அதிகரித்தது எப்படி ? யார் ஆட்சியில்?
இந்த கேள்விகளுக்கெல்லாம் விரைவில் விடை சொல்ல வேண்டும் ! அதே சமயம் தமிழக அரசையும் ஒரு கேள்வி ?
தமிழகத்தில் நீலகிரி பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு பெய்த பெரும் மழையால், பூமி வெடிப்பு ஏற்பட்டு வீடுகளை இழந்த குடும்பங்கள் இன்னமும் நிவாரண முகாம்களில் தான் தங்கி இருக்கிறார்கள் !
கேரளாவுக்கு 5 கோடி நிதியுதவி அளிப்பதில் காட்டும் வேகத்தை
அவர்களை தங்கள் வீட்டில் குடியேற்றுவதிலும் காட்டுங்கள்..
கேரளா அரசு நிதி உதவி கேட்கும் முன்னரே, நிதி உதவி அளித்து தன்னை ஒரு மனிதாபிமானம் மிக்க முதல்வராக முன்னிலைப்படுத்தி கொள்வதில் தான் ஸ்டாலின் குறியாக இருக்கிறாரோ ?
அண்டை மாநிலத்தின் மீது கரிசனம் கட்டுவதில் தவறில்லை..
ஆனால் சொந்த மாநிலம் தவித்துக் கொண்டிருக்கும் போது, அண்டை மாநிலத்திற்கு ஓடி சென்று உதவுவது எல்லாம் கூட்டணி கணக்குகளைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும் ? இந்த மீட்பு பணிகள் விரைவில் நிறைவடைய இறைவனை பிராத்திக்கிறேன் !
அதே சமயம் மத்திய அரசு விடுக்கும் எச்சரிக்கைகளை, கவனமுடன் ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநில அரசை வலியுறுத்துகிறேன் !! இவ்வாறு பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்