*ஆடிப்பெருக்கு விழாவிற்கு மயிலாடுதுறை துலாக் காவேரியில் தண்ணீர் வராதது மிகவும் வருத்தம் அளிக்கிறது* சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் அறிக்கை
பத்து நாட்களுக்கு முன்பே எடுத்துச் சொல்லியும் மயிலாடுதுறை மக்களை அலட்சியப்படுத்தி பொறுப்பற்ற தன்மையில் மெத்தனமாக இருந்ததால் கடைசி நேரத்தில் கும்பகோணம் வரை வந்த தண்ணீர் மயிலாடுதுறைக்கு வந்து சேரவில்லை. நாளை மாலை தான் வரும் என்று கூறுவது *சட்டியில் இருந்தும் அகப்பையில் வரவில்லை கதை போல* அமைந்துவிட்டது. மயிலாடுதுறையில் அழுத்தம் தர வேண்டியவர்கள் அக்கறையோடு இல்லாததால் இக்காவேரி கரை வெறிச்சோடி கிடக்கின்றது. இதற்கு யார் பொறுப்பு ஏற்பது? கடலென காவிரியில் தண்ணீர் வந்தும் வழக்கம்போல வறண்ட காவிரியின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள புஷ்கர புனித தொட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போர்வெல் தண்ணீரில் தான் ஆடிப்பெருக்கு விழா என்பது விதி அல்ல அல்ல சதி. 10 லட்சம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள சூரியனையே ஆய்வு செய்யும் வல்லமை படைத்த பொறியாளர்கள் எங்கே? 30 கிலோமீட்டரில் உள்ள தண்ணீரை உரிய இடத்திற்கு உரிய நேரத்தில் கொண்டுவர வல்லமையற்ற பொறியாளர்கள் இங்கே? வெட்கக்கேடு! கனத்த இதயத்தோடு ஆடிப்பெருக்கு கொண்டாடுவோம் வாரீர்! வாரீர்!!...... இவ்வாறு அ.அப்பர்சுந்தரம் தனது அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்