தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளுக்காவே அர்ப்பனித்து மறைந்த முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் என்.எஸ். பழனிசாமி அவர்களின் 82வது பிறந்த நாளை முன்னிட்டு மணி மண்டப திறப்பு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் நாதகவுண்டன்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது, இந்த மணிமண்டபத்தை முன்னாள் முதல்வரும், ஆதிமுக பொதுச்செயலாளருமான புரட்சித்தமிழர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்து மறைந்த விவசாயி என்.எஸ்.பழனிச்சாமி அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், பொள்ளாச்சி.வி.ஜெயராமன், செ.ம.வேலுசாமி, செ.தாமோதரன், கே.வி.ராமலிங்கம், எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், கே.என்.விஜயகுமார், சூலூர் கந்தசாமி, கழக செய்தித்தொடர்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் வாழ்த்திப்பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயல்தலைவர் என்.எஸ்.பி.வெற்றி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஏ.கே.சண்முகம், மாநில பொருளாளர் சி.தங்கராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தார். பொங்கலூர் ரா. மணிகண்டன் வரவேற்றுப்பேசினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சு,குணசேகரன், சி.சிவசாமி, என்.எஸ்.என்.நடராஜன், கரைப்புதூர் நடராஜன், பரமசிவம் ஆகியோர் பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசும்போது கூறியதாவது:
என்.எஸ்.பழனிச்சாமி சட்டன்றத்தில் பேசிய போது எல்லாம் விவசாயிகளுக்கு குரல் கொடுத்தார். மாண்புமிகு அம்மா அவர்கள் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று கரூர் மாவட்டத்தை உருவாக்கினார் . பச்சைத்துண்டு காவலன் என் எஸ்.பழனிச்சாமி அவர்களுக்கு மணி மண்டபம் திறப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மணி மண்டபம் அவர் புகழை காலம் முழுக்க எடுத்து செல்லும். நாராயணசாமி நாயுடு அவர்கள் மணி மண்டபத்தை நானே திறந்தேன் . அப்போது எனக்கு ரேக்ளா வண்டி பரிசளித்தார். இப்போது என்.எஸ்.பி மணி மண்டபத்தை நானே திறக்கிறேன். எனக்கு 5 மாத கன்றுக்குட்டி கொடுத்துள்ளார்கள்.
எந்த தொழில் வேண்டுமானாலும் செய்து விடலாம் ஆனால் விவசாயம் கஷ்டமான தொழில். எனக்கு நீங்கள் முதல்வராக அங்கீகாரம் கொடுத்ததும் விவசாயத்துக்கு, தொழிலுக்கு நான் முக்கியத்துவம் அளித்தேன் .
அம்மா அவர்கள் இருக்கும்போது, திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டத்தின் விவசாயிகள் வறட்சியால் வேதனைப்பட்டார்கள். தண்ணீர் கிடைக்காமல் இருப்பதால் விவசாயிகள் அம்மா அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்கள். அம்மா அவர்களும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அத்திக்கடவு-அவினாசி திட்டம் செய்து தருவதாக உறுதி அளித்தார்கள் . நான் முதல்வராக இருந்த காலத்தில் அம்மா அவகளின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று 1652 கோடி ஒதுக்கி பணியை தொடக்கி வைத்தேன் . ஆனால் ஸ்டாலின் இந்த திட்டத்தை செய்யவில்லை. தாமதப்படுத்தி செய்துள்ளார். அவர் செய்தது போல பேசி உள்ளார் . ஆனால் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக அரசு தான். கரூர் பக்கத்தில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று 450 கோடி ரூபாயில் தடுப்பணை கட்ட பணி திடக்கினோம். அதையும் கிடப்பில் போட்டு விட்டார்கள்.அதிமுக அரசு ஆட்சியில் இருந்த போது காவிரியில் ஆய்வு செய்து 3 தடுப்பணை கட்ட முடிவு செய்து திட்டம் செய்தோம். திமுக அதையும் கிடப்பில் போட்டது.
ஏரி குளங்கள் தூர்வாறாமல் இருந்த போது, விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக அந்தப்பணியை விவசாயிகளிடமே கொடுத்தோம். ஏரி, குளத்து மண்களை விவசாயிகளே எடுத்து அவர்களது நிலத்துக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தோம். தமிழகத்திலேயே முதன்முதலில் வறட்சி நிவாரணம் கொடுத்த அரசு அதிமுக அரசு. பயிர்க்காப்பீட்டு திட்டம் மூலமாக விவசாயிகளுக்கு 9300 கோடி ரூபாய் வழங்கிய அரசு அதிமுக அரசு. இதுவரை டெல்டா மக்களுக்கு பயிர்க்காப்பீட்டு திட்டம் கிடைக்கவில்லை.
கர்நாடகாவில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை திமுக அரசு பெறவில்லை. கடந்த மூன்று ஆண்டு காலமாக பயிர்க்காப்பீட்டு திட்ட இழப்பீடு விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.
ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக நான், முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி,பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கேரளா முதல்வரை சந்தித்து பேசினோம், அவர் இந்த திட்டத்திற்கு முயற்சி எடுக்கிறேன் என்று கூறினார்.மீண்டும் ஆட்சி அமையாததால் அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது திமுக அரசு அதற்கு முயற்சி எடுக்கவில்லை,மீண்டும் அதிமுக ஆட்சி வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்,உழவர் பெருமக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்த நிகழ்வு சிறப்பாக அமைந்தது
இவ்வாறு எடப்பாடி கே.பழனிச்சாமி பேசினார்.
முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி பேசும்போது கூறியதாவது:
எடப்பாடியாருக்கு மட்டுமே இந்த மணிமண்டபத்தை திறக்க தகுதி உள்ளது, நான்கு வருடங்கள் அற்புதமாக நாட்டை எடப்பாடியார் வழி நடத்தினார், பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார், அத்திக்கடவு திட்டத்தை நீங்கள் செயல்படுத்தாவிட்டால் யாராலும் செயல்படுத்த முடியாது, அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முழு செலவையும் தமிழக அரசு சார்பில் எடப்பாடி யார் நிறைவேற்றியுள்ளார், அவிநாசி அத்திக்காக திட்டத்தை யாரும் கொண்டாட முடியாது, அதிமுக ஆட்சி காலத்தில் 90% அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிறைவடைந்தது, அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை தனி கவனம் எடுத்து எடப்பாடியார் செயல்படுத்தினார், அவிநாசி அத்திச்சையாளர் திட்டம் முழுமையாக எடப்பாடியாருக்கு சொந்தமான திட்டம், ஆனைமலை நல்லாறு திட்டம் ஆட்சி மாற்றம் காரணமாக நிறைவேற்ற முடியாமல் போனது,
மீண்டும் எடப்பாடியார் முதல்வரான பிறகு ஆனைமலையாறு நல்லாறு திட்டம் வரும். இந்த நிகழ்வில் பங்கேற்பது எங்கள் எல்லோருக்கும் உரிமையாக உள்ளது என்று பேசினார், 50 ஆண்டுகால வளர்ச்சியை ஐந்தாண்டுகளில் தந்த நாயகன் எடப்பாடியார் என்று பேசினார்.
மீண்டும் எடப்பாடியார் முதல்வரான பிறகு ஆனைமலையாறு நல்லாறு திட்டம் வரும். இந்த நிகழ்வில் பங்கேற்பது எங்கள் எல்லோருக்கும் உரிமையாக உள்ளது என்று பேசினார், 50 ஆண்டுகால வளர்ச்சியை ஐந்தாண்டுகளில் தந்த நாயகன் எடப்பாடியார் என்று பேசினார்.
இந்த விழாவில் அதிமுக நிர்வாகிகள் யு.எஸ்.பழனிசாமி, ஏ.வி.நடராஜ், புத்தரச்சல் பாபு, காட்டூர் சிவப்பிரகாஷ், ஆர்.முருகேசன், சித்துராஜ், சுரேந்திரன், என்.மோகன்ராஜ், கேத்தனூர் ஹரிகோபால், வேனுகோபால், வக்கீல் சிவப்பிரகாஷ், நரிமுருகன், சுந்தர்ராஜ், கே.கார்த்திகேயன், பரணிக்குமார், தொரவலூர் சம்பத், கொங்கு ராஜாமணி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கே.சண்முகசுந்தரம், குண்டடம் ராசு, பூரண்டாம்பாளையம் மணி, கே.சந்திரசேகர், பாலசுப்பிரமணியம், தங்கவேல், ஈஸ்வரன், கோகுல் என்.ரவி, சக்திவேல் மணி, ஜோதிப்பிரகாஷ், மாணிக்கராஜ், நந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.