நமக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை அதிமுக பொதுச்செயலாளர் புரட்சி தமிழர்.எடப்பாடியார் கட்டாயம் கொடுப்பார் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பேசினார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தெற்கு தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கு கழக அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி அம்மா மாளிகையில் நடைபெற்றது. முன்னாள் துணை சபாநாயகரும் திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன், வி.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் மத்தியில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி.வி. ஜெயராமன் பேசும்போது கூறியதாவது: அனைத்து வார்டு செயலாளர்களும் வீடு வீடாகச் சென்று அடையாள அட்டையை உறுப்பினருக்கு நேரடியாக வழங்கிட வேண்டும், ஒருவேளை உறுப்பினர் வணங்கா விட்டாலும் எங்களிடம் பென்டிரைவ் உள்ளது நாங்கள் அவருக்கு கொடுக்கும் அளவிற்கு யாரும் வைத்துக் கொள்ள வேண்டாம், கட்டாயம் அனைவரும் இந்த அடையாள அட்டை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி டாக்டர்.ஜெ.ஜெயலலிதா நம்பிக்கை கொடுத்தது போல் புரட்சித் தமிழர் எடப்பாடி.யார் அவர்களும் நமக்கு ஒரு நம்பிக்கையான எதிர்காலத்தை கொடுப்பார், பாராளுமன்றத் தேர்தலில் மோடியா, ராகுலா என்ற மக்கள் பார்த்தனர் அதனால் மோடியை பிடிக்காதவர்கள் ராகுலுக்கு வாக்களித்தனர், யாரும் ஸ்டாலினுக்காக வாக்களிக்கவில்லை, வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியாரா ஸ்டாலினா என்று வரும் பொழுது கட்டாயம் நம் பொதுச் செயலாளர் மீண்டும் முதல்வர் ஆவார், நான்கரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தந்தார், கொரோனா காலகட்டத்திலும் இந்த வருமானம் இல்லாத போதிலும் தமிழக மக்களை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார், பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கினார் , எடப்பாடியாருக்கு நிகராக யாரும் இல்லை என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பேசினார்.
இந்த கூட்டத்தில் பகுதி கழக செயலாளர்கள் அன்பகம் திருப்பதி,கண்ணப்பன், ஏ.எஸ்.கண்ணன், வி.பி.என்.குமார், கழக நிர்வாகிகள் சிட்டி பழனிசாமி, மார்க்கெட் சக்திவேல், அட்லஸ் லோகநாதன், எஸ்.பி.என்.பழனிசாமி, வக்கீல் முருகேசன், கண்ணபிரான், சுந்தராம்பாள், தாமோதரன், ஆண்டவர் பழனிசாமி, ஸ்ரீதரன், சின்னச்சாமி, தனபால், சோமு, பாரப்பாளையம் ரவி, சின்னச்சாமி,
சிவளாதினேஷ்,
உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.