திருப்பூர் நாதகவுண்டம்பாளையத்தில் என்.எஸ்.பழனிசாமி மணிமண்டபம்... எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைக்கிறார்... முன்னாள் அமைச்சர்கள் ஆய்வு

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மறைந்த என்.எஸ்.பழனிசாமியின் 86,ம் ஆண்டு பிறந்தநள் மற்றும் அவரது மணி மண்டபம் திறப்பு விழா வருகின்ற 18ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அவரது சொந்த ஊரான நாதகவுண்டம்பாளையத்தில் நடைபெறுகிறது. 

இந்த விழாவில் அ.திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு என்.எஸ்.பழனிசாமி மணிமண்டபத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.விழாவிற்கு ஏர்முனை இளைஞர் அணி தலைவரும், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயல் தலைவருமான என்.எஸ்.பி.வெற்றி தலைமை தாங்குகிறார். மேற்கு மண்டல அதிமுக பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயளலாளர், முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, கே.சி.கருப்பண்ணன், செ.ம.வேலுசாமி மற்றும் இன்னாள் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள், மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய பேரூர் கழக, பகுதி கழக செயலாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநதிகள், கூட்டுறவுக் சங்க முன்னாள் பொறுப்பாளர்கள், விவசாய சங்கங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.


இந்த விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில்  பல்லடம் தாராபுரம் ரோட்டில் உள்ள வி.கள்ளிப்பாளையம் பிரிவு அருகே வரவேற்பு மேடை அமைக்கும் இடத்தையும், கட்சி நிர்வாகிகள் வரும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தையும், என்.எஸ்.பழனிசாமி மணிமண்டபம் மற்றும் 50000க்கும் மேற்பட்டவர்கள் அமரும் வகையில் அமைக்கப்படும் விழா மேடை அமைக்கும் இடத்தையும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளாரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதில் பல்லடம் முன்னாள் எம்எல்ஏக்கள்  கரைப்புதூர் ஏ.நடராஜன்,  கே.பி.பரமசிவம், மாவட்ட அவைத்தல்வர் எஸ்.சிவாச்சலம்,  மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் புத்தரச்சல் பாபு, வழக்கறிஞர்கள் வெங்கடாஜலபதி, மற்றும் மோகன்ராஜ்,பொதுக்குழு உறுப்பினர்கள் தண்ணீர் பந்தல் நடராஜன், ஜெயந்தி லோகநாதன், ஒன்றிய செயலாளர்கள் யு.எஸ்.பழனிசாமி, சிவபிரகாஷ், சித்துராஜ், மற்றும் நகர, பகுதி, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி, மாநில துணைத்தலைவர் கே.பி.சண்முகசுந்தரம், மாநில பிரச்சார குழு செயலாளர் குண்டடம் தங்கவேல், திருப்பூர் மாவட்ட செயலாளர் கே.எம்.ராமசாமி, தெற்கு மாவட்ட தலைவர் எம்.ஈஸ்வரன், திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் கோகுல்ரவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், பொங்கலூர் வட்டார. செயலாளர் பழனிசாமி, பொருளாளர் துரைசாமி மற்றும் பொங்கலூர் வட்டார சங்க நிர்வாகிகள கலந்து கொண்டனர்.

Previous Post Next Post