எதிர்வரும் தேர்தலை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட மக்கள் விரோத பட்ஜெட புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் அறிக்கை.
சினிமா பட பாணியில், முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். சினிமா படம் பொழுது போக்கிற்காக எடுக்கப்படுகிறது. படத்தில் கதாநாயகன் பேசும் வசனத்தில் எந்த உண்மையும் இருக்காது. அது போலவே முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் எந்த உண்மையும் இல்லை. இவை அனைத்தும் ஏற்கனவே கடந்த மூன்றாண்டு காலமாக அறிவித்து வரும் திட்டங்கள் தான், ஆனால் எந்த ஒரு திட்டமும் நடைமுறை படுத்தியதில்லை. மொந்த பழசு கள்ளு புதுசு என்கிற பழமொழிக்கு ஏற்ப, அறிவித்த திட்டங்கள் அனைத்தும் பழசு , 2024 வருடம் மட்டும்தான் புதுசு.
கூட்டணி ஆட்சி பதவி ஏற்றதும் முதல் பட்ஜெட் கூட்ட தொடரில் அறிவித்த பல திட்டங்கள் நடைமுறை படுத்தவில்லை .குறிப்பாக குப்பை வரி ரத்து என்று அறிவித்து விட்டு இதுவரை நடைமுறை படுத்த வில்லை. பெண் குழந்தை பிறந்தால் 50000 வைப்பு நிதியாக 18 ஆண்டுகளுக்கு தேசிய வங்கிகளில் செலுத்தப்படும் என்று அறிவித்து ஒரு சிலபேருக்கு கொடுத்து விட்டு திட்டம் கிடப்பில் போடப்பட்டது. உப்பனாரு மேம்பாலம் ஒரு வருடத்தில் கட்டி முடிப்போம் என்பது வெற்று அறிவிப்போடு நின்று விட்டது, பெண்கள் இலவசமாக அரசு பஸ்ஸில் பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பு , கோவில் சொத்துக்கள் விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்காப்படும் என்ற அறிவிப்பு , காஸ் மானியம் அறிவிப்பு , உலக தமிழ் சங்க மாநாடு புதுச்சேரியில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு , அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு , ஸ்மார்ட் சிட்டி திட்டம் அனைத்தும் அறிவிப்போடு உள்ளது. இதிலிருந்து ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு உதவாது என்பது தெரிகிறது. இரட்டை என்ஜின் ஆட்சி இருந்தால் தான் மத்தியில் இருந்து நிதி கிடைக்கும் என்று கூறிவிட்டு நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து மக்களை ஏமாற்றியது எந்த விதத்தில் நியாயம். தற்போது அறிவித்துள்ள பட்ஜெட் ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், புதிய தொழிற்சாலை தொடங்கி வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவோ , மூடப்பட்ட மூன்று மில்களை ஒன்றிணைத்து ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டமோ அறிவிப்பில் இல்லை. தொழிலாளர் நலன் சார்ந்த விஷயங்கள், மக்களுக்கு சோறு போடும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான விவசாய கடன் தள்ளுபடி, , விவசாயிகளின் நலன் சார்ந்த விஷயங்கள் பட்ஜெட்டில் திருப்பதிகரமக இல்லை . மொத்தத்தில் தொலை நோக்கு பார்வை இல்லாமல் ஏழை எளிய மக்களை வஞ்சித்து எதிர் வரும் தேர்தலை மையப்படுத்தி முதல்வர் சுயநலத்திற்காக தயாரிக்கப்பட்ட உப்பு சப்பில்லாத மக்கள் விரோத பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார் என்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் என்ற முறையில் பதிவு செய்கிறேன் இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்