ஃபாரின் போறார் அண்ணாமலை... 3 மாசம் கட்சிக்கு லீவு... பாஜக தலைவர் யார்?

 லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டியில் அரசியல் பயிற்சி பயில வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செல்லவிருக்கிறார். இதுகுறித்து திருப்பூரில் நடந்த கூட்டத்தில் அவர் நிர்வாகிகளிடம் தெரிவித்து உள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான  மண்டல தலைவர்கள் கூட்டம் திருப்பூர் அருகே உள்ள கணக்கம்பாளையம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கூட்ட. நிறைவடைநத நிலையில்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர், தமிழகம் மீட்போம். தளராது உழைப்போம். சமூக நீதியை வழங்குவோம் என பேசி மண்டல தலைவர்கள் அனைவரையும் உறுதி மொழி ஏற்க சொன்னார். 

மேலும் இந்த கூட்டத்தில் செய்தியாளர்க்ளை அனுமதிப்பதற்கு முன்னரே நிர்வாகிகளிடம் பேசிய அவர்,  தான் வருகிற 28 ஆம் தேதி லண்டன் செல்ல இருப்பதாகவும், 3 மாதங்கள் அரசியல் சார் படிப்பினை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க இருப்பதாகவும், அதுவரை தமிழக பாஜக பொறுப்பை மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் கவனிப்பார்  என கூறப்பட்டதாக பாஜக மண்டல தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவினர் தெரிவித்தனர்.  

இதனால் 3 மாதம் வெளிநாடு செல்லும் அண்ணாமலையின் இடத்தினை கேசவ விநாயகம் கவனிப்பார் என்பது உறுதி ஆகிறது.

ஏற்கனவே பாஜக மாநில தலைமை பதவிக்கு தமிழிசை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், கேசவ விநாயகத்தை அண்ணாமலை அறிவித்துள்ளது ஒரு தரப்பு நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக பாஜகவினர் பேசிக்கொள்கின்றனர். 

 இந்த கூட்டத்தில் சில நிமிடங்கள் மட்டுமே செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த கூட்டம் நிறைவடைந்த பின்னர் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆன ராம சீனிவாசன் மற்றும் ஏ பி முருகானந்தம் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது 'இந்தக் கூட்டத்தின் முக்கிய பிரகடனமாக தமிழகம் மீட்போம் தளராது உழைப்போம் என்பது தங்களது நோக்கம் எனவும் தமிழகம் முழுவதிலும் இருந்து 1300 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் தொண்டர்கள் உற்சாகத்துடன் உள்ளதாகவும் மீண்டும் கட்சியை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டுள்ளது என்றும் ஒவ்வொரு பகுதியிலும் கட்சியை பலப்படுத்த அந்தந்த பகுதி குழுவாரியான ஆலோசனை நடைபெற்றது எனவும் இன்று முதல் ஒவ்வொரு தொண்டரும் தேர்தல் பணியை தொடங்கியுள்ளார்கள் பாஜக கட்சி தேர்தல் பணியை சிறப்பாக தொடங்கியுள்ளது எனவும் திமுக ஆட்சியை அகற்றுவது எங்கள் இலக்கு எனவும் வரும் 2026 தேர்தல் மூலம் திமுக மக்கள் செல்வாக்கை இழந்து ஆட்சியை இழக்கும் என்பதே எங்கள் திருப்பூர் பிரகடனம் என தெரிவித்தார்.

Previous Post Next Post