ரயில் நிலையத்தில் 100 அடி கொடிக்கம்பம் அமைப்பு கோரிக்கையை நிறைவேற்றியமைக்கு சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் ரயில்வே துறைக்கு நன்றி
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அமைத்துள்ளது போல 100 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியினை பறக்க விட வேண்டும் என்று நாட்டின் 75 வது சுதந்திர தினம் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு முதல் சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் தொடர்ந்து தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தார். தற்பொழுது மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 25 கோடி மதிப்பிலான அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டமைப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்ற வேளையில் 100 அடி கொடி கம்பமும் ரயில்வே நுழை வாயில் பகுதியில் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டின் 78வது சுதந்திர தினம் நடைபெறும் இத்தருணத்தில் கொடிக்கம்பம் அமைக்கப்படுவது மிகவும் சிறப்புடையதாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தெரிவித்துள்ளார். மேலும் 100 அடி உயர கொடி மரம் அமைவதற்கு உதவிய அனைத்து செய்தித்தாள் மற்றும் ஊடகத்துறையினருக்கும் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கும், ரயில்வே துறை பொறியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.