மயிலாடுதுறையில் 100 ஆண்டுகள் பழமையான ஆர்.எம்.எஸ் தபால் துறைக்கு உரிய இடம் வழங்க ரயில்வே துறைக்கு சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கோரிக்கை

*மயிலாடுதுறையில் 100 ஆண்டுகள் பழமையான ஆர்.எம்.எஸ் தபால் துறைக்கு உரிய இடம் வழங்க ரயில்வே துறைக்கு சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கோரிக்கை!* 

மயிலாடுதுறை இரயில் நிலையைத்தில் சுமார் 100 ஆண்டுகளாக மயிலாடுதுறை RMS இயங்கி வருவதை அனைவரும் அறிவோம். இந்த அலுவலகத்தினால் பொது மக்கள் எண்ணற்ற பயன் அடைந்து வருகின்றனர். தற்போது மயிலாடுதுறையி இரயில் நிலையத்தில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக FOB எனப்படும் Foot over Bridge RMS அலுவலகத்தில் ஒரு பாதியில் அமைய இருப்பதாகக் கூறி, அப்பகுதியை காலி செய்து தருமாறு இரயில்வே துறை கேட்டுக்கொண்டது. மேலும் இதற்கு மாற்று இடம் வழங்குகிறோம் என்று இரயில்வே துறையினர் உறுதி அளித்ததன் பேரில் RMSன் ஒரு பகுதியை காலி செய்து கொடுத்தார் கள், அந்த பகுதிக்கு மாற்றாக இரயில்வே Quartersல் 229 என்ற கட்டிடத்தை தற்காலிகமாக இரண்டு மாத காலத்திற்கு கொடுத்தனர்(அந்த கட்டிடமும் RMS அலுவலகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்க போதுமானதாக இல்லை). இதன் தொடர்ச்சியாக முழு கட்டிடத்தையும் காலி செய்யுமாறு கூறுகின்றனர், ஆனால் இரயில்வே எல்லையில் வேறு மாற்று இடம் கட்டி தருவதற்கான முகாந்திரமோ உத்திரவாதமோ தரவில்லை.
மயிலாடுதுறை இரயில் நிலையத்திலுள்ள RMS அலுவலகத்தால் மக்களுக்கு கிடைக்கும் சேவைகள் பின்வருமாறு,

1. மயிலாடுதுறை RMS அலுவலகம் மாலை 06.00 மணி முதல் காலை 06.40 வரை நடைமேடை1ல் இயங்கி வருகிறது.
2. இதில் பொது மக்களுக்கான சேவைகளான பதிவு தபால்(Register post), விரைவு தபால் (Speed post), பதிவுக்கட்டு (Register Parcel), சாதாரண தபால்(Unregistered mails) மாலை 06.00 மணி முதல் காலை 04.00 வரை வழங்கப்படுகிறது. இதன் மூலம் மயிலாடுதுறை இரயில் நிலையத்திற்கு வருபவர்களும், இரயிலில் பயணிப்பவர்களும், பகலிலே அஞ்சலகம் செல்ல இயலாத வெகுஜனங்களும் தங்களது தபால்களை அனுப்பி பெரிதாக பயன்பெற்றனர்.
3. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 71 தலைமை மற்றும் துணை அஞ்சலகத்திற்கு அனைத்துவிதமான தபால்களும், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 54 தலைமை மற்றும் துணை அஞ்சலகத்திற்கு விரைவு தபால் மற்றும் பதிவுக்கட்டுகளை கையாண்டு இம்மூன்று மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் நம் மயிலாடுதுறை RMS துரித தபால் சேவை வழங்கிவருகிறது.
4. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர் தபால்களும் RMS அலுவலகம் வந்து பிரிக்கப்பட்டு வெளிநாடு, வெளி மாநிலம், மற்றும் வெளி ஊர்களுக்கு அனுப்பப்படுகிறது.
5. மயிலாடுதுறை RMS மூலம் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு பான் கார்டுகள், ஆதார் அட்டைகள், கடவுச்சீட்டு(Passport), வாக்களர் அடையாள அட்டை(Voter ID), குடும்ப அட்டை(Ration card), ஓட்டுனர் உரிமம்(Driving License), பல்வேறு வங்கிகளின் ஏடிஎம் அட்டைகள், தேர்தல் நேரங்களில் தபால் ஓட்டுகளும் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கிடைக்கப்படுகிறது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயரால் வகுக்கப்பட்டு ஒவ்வொரு பெரிய இரயில் நிலையத்திலும் RMS அஞ்சல் அலுவலகம் நிறுவப்பட்டு, இரயில் மூலம் தபால்கள் விரைந்து அனுப்ப ஏதுவாக உள்ளது. சில முக்கிய இரயில்களில் பெரும் நகரங்களை இணைக்கும் வகையில் RMSக்காக தனிப்பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. RMS அலுவலகம் நடைமேடையை விட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் தாமதமடையும். இரயில்வே துறையும், அஞ்சல் துறையும் மத்திய அரசின் கீழ்தான் உள்ளது. இதுபோன்ற மக்களுக்கு சேவை செய்யும் மயிலாடுதுறை RMS அலுவலகத்திற்கு இரயில்வே துறை மாற்று இடம் கட்டி கொடுக்க வேண்டும். 100 ஆண்டு பழமை வாய்ந்த RMS அஞ்சல் சேவை தொடர்ந்து மக்களுக்கு கிடைத்திட வேண்டும். ஆகவே மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு நமது மயிலாதுறைக்கும், மக்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் காலியாக உள்ள கட்டிடத்தை ஒதுக்குமாறு அல்லது காலியாக உள்ள இடத்தில் மயிலாடுதுறை RMSக்கு புதிய கட்டிடம் கட்டி தர ஏற்பாடு செய்யுமாறு ரயில்வே துறைக்கு சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார். .
Previous Post Next Post