கோவையில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த கோடீஸ்வரர் கைது
கோவை:-ஜூலை-09 கோவை மாவட்டம் சூலூர் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடுபோய் வந்தன குறிப்பாக சூலூர் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையின் முன்பு நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்கள் அடிக்கடி திருடுபய் வந்தன இது தொடர்பாக பல்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்டு வாகன திருடர்களை போலீசார் தேடி வந்தனர் இதே போல பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மருத்துவமனை பீளமேடு பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனை பகுதிகளிலும் மருத்துவமனைக்கு வரும் வாடிக்கையாளர்களின் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போய் வருவது மாவட்ட காவல் துறையினர் கவனத்திற்கு வந்துள்ளது அதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் மேற்பார்வையில் சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையில் இரண்டு தனிப்படையில் அமைக்கப்பட்டு திருடர்களை பிடிக்க கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார் அதன் பெயரில் தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு மேலாக சூலூரில் உள்ள பிரபல மருத்துவமனையின் முன்பாக போலீசார் இரவு பகலாக திருடனின் வரவுக்காக காத்திருந்தனர் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் ஒண்டிப்புதூர் சூர்யா நகரை சேர்ந்த தனபால் என்பவர் தனது பல்சர் வாகனத்தை மருத்துவமனை முன்பு நிறுத்திவிட்டு மருத்துவ ஆலோசனைக்காக உள்ளே சென்று இருந்து இருந்தார் அப்போது அங்கு வந்து மர்மநகர் ஒருவர் தனபால் பல்சர் வாகனத்தை பூட்டை உடைத்து திருடிக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றான் தொடர்ந்து போலீசார் துரத்திச் சென்றனர் சூலூர் விமானப்படைத்தளம் அருகே வாகனத்துடன் சென்று கொண்டு இருந்தபோது போலீசார் அவரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர் விசாரணையில் கோவை மற்றும் ஒன்றி திருச்சி திண்டுக்கல் ஈரோடு திருப்பூர் மாவட்டங்களிலும் இந்த நபர் வாகனத்திற்கு ஈடுபட்டது தெரியவந்தது அவரை அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில் அவரது பெயர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவரது மகன் கௌதம் (34) என்பதும் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது இவர் பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் குழாய் பதிக்கும் பணிகளை காண்ட்ராக்ட் எடுத்து செய்து வந்துள்ளார் இவருக்கு கரூர் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள குழந்தைவேலு எனும் தனியார் விடுதி உள்ளது இருந்தும் திருடுவதை ஒரு ஹாபியாக செய்து வந்துள்ளார் தான் பணி செய்ய செல்லும் பகுதிகளில் குறிப்பாக மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை குறி வைத்து திருடி செல்வதை வாடிக்கையாக கொண்ட இவர் நேற்று சூலூர் போலீசாரில் வசமாக மாட்டினார் அவரிடம் விசாரணை நடத்திய நடத்தியதில் சூலூர் பீளமேடு பாப்பநாயக்கன்பாளையம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் திருடிய 12 இருசக்கர வாகனங்களை போலீசார் கைப்பற்றினர் கெளதமன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.