புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் முதல் முதலாக மாதிரி நிதிநிலை அறிக்கை தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு

புதுச்சேரி மாநிலத்தில் 62 ஆண்டு கால சட்டமன்ற வரலாற்றில் 
 புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் முதல் முதலாக மாதிரி நிதிநிலை அறிக்கை தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் மற்றும் பொதுச்செயலாளர் எ. மு. ராஜன் முன்னிலையில்  கழகத்தலைவர் பேராசிரியர் மு. ராமதாஸ் ஆகியோரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
 கடந்த 62 ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலத்தை காங்கிரஸ், , திமுக கம்யூனிஸ்ட் கூட்டணி, திமுக, அதிமுக, என்.ஆர்  காங்கிரஸ், பாஜக,  காங்கிரஸ்  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சி புரிந்துள்ளன. இத்தனை ஆண்டுகளாக மாநில வளர்ச்சியை மட்டுமே முன் வைத்து முழுக்க முழுக்க அரசியல் கலப்பில்லாத பொருளாதார ரீதியான நிதிநிலை அறிக்கையை எந்த ஆட்சியாளர்களும் கட்சிகளும் வழங்கவில்லை. அதன் காரணமாக புதுச்சேரி மாநிலம் தொடக்க காலத்தில் இருந்ததைவிட பொருளாதார ரீதியாகப்  பின்னுக்குத் தள்ளப்பட்டு சீரழிந்து வருகிறது.
 கடந்த 13 ஆண்டுகளில் ஒரு ஆண்டைத்  தவிர  எந்தக் காரணமும் இல்லாமல் முழு பட்ஜெட் வழங்காமல் இடைக்கால பட்ஜெட் எனும் பெயரில் ஏதோ பெயருக்கு நிதிநிலை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படு, தொடர்ச்சியாக புதுச்சேரி மக்கள் வஞ்சிக்கப்பட்டு  வருகின்றனர். இதற்கெல்லாம் மாற்றாக புதுச்சேரி மாநில 16 லட்சம் மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மனதில்  கொண்டு மாதிரி நிதிநிலை அறிக்கை ஒன்றை புதியதாகத் தொடங்கப்பட்ட நமது புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம்,   ரங்கசாமி அரசு சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை வழங்குவதற்கு முன்பாக ஒரு மாற்று நிதிநிலை அறிக்கையை வழங்கத் திட்டமிட்டது. அதன்படி 46 ஆண்டு காலம் புதுச்சேரிக் கல்லூரிகளிலும் புதுவைப் பல்கலைக் கழகத்திலும் பொருளாதாரத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியதோடு, நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாகச் செயலாற்றிய  கழகத்தின் தலைவர் பேராசிரியர் 
மு ராமதாஸ் இரவு பகலாகப் பாடுபட்டு ஒரு முழுமையான
முன்னோட்ட நிதிநிலை அறிக்கையைத் தயாரித்துள்ளார்.
 இந்த நிதிநிலை அறிக்கையின் முழு விவரங்களை 
( 26 7.2024 ) வெள்ளிக்கிழமை  காலை 10.00 மணிக்கு வெங்கட்டா நகரில் உள்ள புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நிழல் பட்ஜெட்டை  வெளியிட்டார். அதனை கழகத்தின் சேர்மன் ஆ.எல் வெங்கட்டராமன் பெற்றுக் கொண்டார். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மாநில துணை தலைவர்  ஆனந்தன் , பொருளாளர் செல்வகுமாரி ,மாநில செயலாளர்கள் பரந்தாமன் , ரவிகுமார் , சிவகுமாரன் , இணை செயலாளர் சுப்ரமணி ,உதவி செயலாளர் ஆண்டாள் , கருணாநிதி , மீனவர் அணி தலைவர் சந்திரன் , காலாபட்டு குமார் , நாகமுத்து, இதயவேந்தன், முருகன் மகளிர் அணி தலைவர் விமலா பெறியாண்டி மற்றும் கழகத்தின் மாநில நிர்வாகிகள்,மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், அணித் தலைவர்கள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் 
 திரளாகக் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post