நீலகிரி தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாஸ்டர்.மாதன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்
படுகர் சமூகத்தினர் உயர்வுக்கும்
நீலகிரி தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டவர்
எளிதில் அணுக முடிந்தவர் இனிமையாக பேசுபவர்
கொடுக்கும் புகார் மனுக்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தி அதை முறையாக செயல்படுத்தியவர்
முன்மாதிரியான அரசியல் செயல்பாட்டாளர்
1998 பிப்ரவரி 14 பிற்பகல் கோவை ஆர்.எஸ் புரத்தில் குண்டு வெடித்த போது நானும் மாஸ்டரும் கோவை பிரஸ் கிளப்பில் பத்திரிக்கையாளரை சந்தித்துக் கொண்டிருந்தோம்
செய்தி கேட்டவுடன் ஓடோடி வந்து இடத்தை பார்வையிட்டு ஏர்போர்ட்டுக்கு வந்த பாரதப் பெருந்தலைவர் ஐயா அத்வானி அவர்களை சந்தித்து உண்மைகளை விளக்கினோம்
நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளராக அப்போது இருந்த நான் பாராளுமன்றத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் குண்டுவெடிப்பில் பலியான அறுவரின் உடலை எடுத்து வந்து அடக்கம் செய்ய உதவினேன் அப்பொழுதுதான் நான் பயங்கரவாதிகளால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டு ஆறுவாரம் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த கதை வேறு