தனியார் பள்ளி மீது அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார்

தனியார் பள்ளி மீது அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர் அதில்
கோவை மாவட்டம், செல்வபுரம் பகுதியில் ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. மேற்படி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் (PTA) ஆரம்பிக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் ஒன்று கூடி பல முறை கேட்டும் அதனை நிறைவேற்றவில்லை. மேற்படி பிரச்சனை குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களது தலைமையில் நடத்தப்படும் நுகர்வேர் காலாண்டுக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் அநேக பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் முறையாக செயல்படுத்துவதில்லை என நுகர்வோர் அமைப்புக்களால் தொடர்ந்து புகார் அளித்து வந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இந்நிலையில் ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் வழிகாட்டல்படி மாணவர்களிடம் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் பள்ளி நிரவாகம் தன்னிச்சையாக முடிவு செய்து முறைகேடாக கல்விக் கட்டணம் வசூலித்து வருகின்றனர். மேலும் மேற்படி பள்ளியில் மாணவ மாணவியர்கள் பயன்படுத்தும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிப்பதில்லை. நோட்டுப் புத்தகங்களின் விலை தோரயமாக குறிப்பிட்டு ஒரே தொகையாக வசூலிக்கின்றனர். மாணவ மாணவிகளுக்கான சீருடைகளை அடிக்கடி மாற்றுவதால் பெற்றோர்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் புதிய மாணவர்கள் சேர்க்கையிப் போது அதிகப்படியான நன்கொடை வசூலிக்கின்றனர்.
இப்பிரச்சனைகள் குறித்து பெற்றோர்கள் பள்ளி முதல்வர் அவர்களிடம் நேரில் சந்தித்து எடுத்துக் கூறினால் பெற்றோர்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியாக பதில் அளிக்கிறார். பள்ளி சம்பந்தப்பட்ட அனைத்து முடிவுகளும் நிர்வாகத்தின் முடிவுப்படிதான் இருக்கும் எனவும்,விருப்பம் இருந்தால் பள்ளியில் சேருங்கள் இல்லையேல் இங்கு யாரும் வர வேண்டிய அவசியம் இல்லை எனவும், இவ்வாறு பெற்றோர்கள் ஒன்று கூடி வந்தால் பள்ளி நிர்வாகத்தின் எதிர் விளைவு மிகவும் மோசமாக இருக்கும் என மிரட்டும் தோரணையில் பதில் அளிக்கிறார்.
மேற்படி பிரச்சனைகள் குறித்து பெற்றோர்கள் 22.03.2024 தேதியிட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுககு புகார் அளித்ததில், மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் அவர்கள் மேற்படி பள்ளிக்கு நேரில் வந்து பெற்றோர்களையும் அழைத்து விசாரித்து விட்டு உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதியளித்து விட்டு சென்றார். ஆனால் நாளது தேதி வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் பள்ளிகள் சம்பந்தமாக கல்வித்துறை அலுவலர்களுக்கு புகார் அளிக்கப்பட்டால் அவர்களால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்டாததால் கல்வித் துறை அலுவலர்கள் மீது அவநம்பிக்கை ஏற்பட்ட வண்ணம் உள்ளது என்பதையும் இதன் மூலம்  தெரிவித்துக் கொள்கிறோம்.
 இவ்வாறு அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்
Previous Post Next Post