மயிலாடுதுறை பேருந்து நிலையத்தின் நுழைவாயிலில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் முதியவர்கள் பெண்கள் பலர் அடிக்கடி தடுமாறி கீழே விழுகின்றார்கள். பேருந்துகள் கூட பள்ளத்திற்காக வளைந்து வளைந்து செல்வதை காண முடிகின்றது. இப்படிப்பட்ட சிறுசிறு பிரச்சனைகளை கூட சமூக வலைத்தளங்கள் மட்டும் செய்தி ஊடகங்களில் வெளிப்படுத்திய பிறகு தான் சீரமைப்பு செய்வது என்பது ஏற்புடையதல்ல. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இப்பகுதிகளுக்கு வருவதே இல்லையா? அரசு வழங்கும் ஏசி கார்களின் பவனி வருவதால் அவர்களின் கண்களில் இப்படிப்பட்ட பள்ளங்கள் மற்றும் சிறு சிறு பிரச்சனைகள் கூட தெரியவில்லை என்று நினைக்கின்றேன். ஆகவேதான் பலதரப்பட்ட மக்களும் நம்மிடம் எடுத்துரைக்கும் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மயிலாடுதுறைமாவட்ட ஆட்சியர் மட்டும் விவேகமுடன் பணியாற்றுகின்ற பொழுது மற்ற அனைத்து துறை அலுவலர்களும் இப்படிப்பட்ட விவேகத்தைப் பெற வேண்டும், மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். மக்களின் தேவைகளை அறிந்து உணர்ந்து அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, கண் துஞ்சாது கடமையாற்றி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சிக்கு மேலும் நற்பெயர் ஈட்டித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்