மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை டாக்டர் நியமிக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை டாக்டர் நியமிக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை                 

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரந்தரமாக அறுவை சிகிச்சை டாக்டர் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் மிகவும் அவதியுற்று வருகிறார்கள். ஆகவே அவசிய அவசரமாக தேவைப்படும் அறுவை சிகிச்சை மருத்துவரை உடனடியாக நியமிக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்ர  அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை அனுப்பி உள்ளார்.  மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைநகராக அமைந்துள்ள மயிலாடுதுறையில் மாவட்ட மருத்துவமனையாக கருதப்படும் மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. குறிப்பாக எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 45 கோடி மதிப்பிலான ஏழு மாடி கட்டிடம் வாணலாவ எழுந்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை, குத்தாலம், பூம்புகார், சீர்காழி, கொள்ளிடம்,  தரங்கம்பாடி, செம்பனார் கோவில், மணல்மேடு, வைத்தீஸ்வரன் கோவில் போன்ற பகுதிகளில் இருந்து தினசரி 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் வருகை தந்து புறநோயாளிகளாகவும், உள் நோயாளிகளாக தங்கியும் சிகிச்சை பெற்று செல்கின்றார்கள். மேலும் விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கடந்த காலங்களை ஒப்பிடுகையில் மயிலாடுதுறை மருத்துவமனையில் பல்வேறு வசதிகளுடன் சிறப்பாக செயல்படுவதாக பொதுமக்களே பாராட்டுகின்ற அதே வேளையில் சாதாரணமாக    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக அறுவை சிகிச்சை நிபுணர் இல்லாமல் நோயாளிகள் பலரும்  மிகுந்த சிரமம் அடைகின்றார்கள். ஒரு சாதாரண உடல் வாழ்வு அறுவை சிகிச்சை அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன், சிறு கொப்பளங்கள் கட்டிகள் அகற்றுதல் போன்ற அறுவை சிகிச்சை செய்வதற்கு கூட நிரந்தரமாக அறுவை சிகிச்சை டாக்டர் இல்லாத காரணத்தினால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் செய்ய முடியாமல் திருவாரூர், தஞ்சாவூர், பாண்டிச்சேரி போன்ற பகுதிகளுக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பப்படுவது தொடர்கதையாக வருகிறது. டெப்டேஷன் என்னும் முறையில் வருகின்ற டாக்டர்களும்கூட இங்கே பணிகள் செய்வதற்கு விருப்பம் இல்லாமல் செல்வதையும் காண முடிகின்றது. ஆகவே நிரந்தர அறுவை சிகிச்சை டாக்டர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏழை எளிய நடுத்தர மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்கான மருத்துவரை உடனடியாக நியமித்து உதவிட தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post