தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டாம் கட்டமாக, தர்மபுரி மாவட்டம், பாளையம் புதூர் ஊராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஊரகப் பகுதிகளுக்கான "மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சவண்டப்பூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை திருப்பூர் எம்.பி.சுப்பராயன் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம்,திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம்,ஒன்றிய செயலாளர்கள் கோரக்காட்டூர் ரவிச்சந்திரன், எஸ்.ஏ.முருகன், எம்.சிவபாலன்.ஊராட்சி மன்ற தலைவர்கள் சுரேஸ்குமார்,(சவண்டப்பூர்), கிருபா (பாரியூர்), சரஸ்வதி ராஜசேகர் (அம்மாபாளையம்), பூபதி, (பெருந்தலைவர்)குருசாமி (மேவாணி) ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.
நிகழ்வில் பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர், அதில் பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் பணமோசடி என்பது ஒரு குற்றத்தின் மூலம் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வழி. மருந்து பரிவர்த்தனை அல்லது பயமுறுத்தும் நிதியுதவி,குற்றத்தின் பணமானது கசப்பானதாகக் கருதப்படுகிறது, மேலும் அது சுத்தமாகத் தோற்றமளிக்க "சலவை" செய்யும் செயல்முறை. என்றும் பணமோசடி என்பது ஒரு வெள்ளை காலர் குற்றமாகும். அதே போல் கவர்ச்சிகரமான விளம்பரத்தால் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட வேண்டாம் எனவும் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் பொதுமக்களிடையே
ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு காவல்ஆய்வாளர் அன்புச்செல்வி விளக்கமாக கூறினார். இதில் உதவி ஆய்வாளர் மேனகா, சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் உட்பட பொருளாதார குற்ற பிரிவு காவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஊராக உள்ளாட்சி, வருவாய் துறையினர்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
செய்தியாளர் எம்.மாரிச்சாமி 9080602161