கோவில்பட்டியில் உரிய அங்கீகாரம் இல்லாமல் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்த கணினி மைய உரிமையாளர் கைது


 *கோவில்பட்டியில் உரிய அங்கீகாரம் இல்லாமல் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்த கணினி மைய உரிமையாளர் கைது*

கோவில்பட்டி இனாம் மணியாச்சி மேம்பாலம் அருகே மில்கேட்  சாலையில் மேலக்காலனியை சேர்ந்த மகேஸ்வரன் (59) என்பவருக்கு சொந்தமான துளசி கம்ப்யூட்டர்ஸ் என்ற பெயரில் கணினி மையம் நடத்தி வந்துள்ளார்.

அங்கீகாரம் இல்லாமல் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையின் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஜூன் 29 ம் தேதி துளசி கணினி மையத்தில் திடீரென சோதனை நடத்தியதாக தெரிகிறது. அப்போது, ​அங்கீகாரம் இல்லாமல் தனிப்பட்ட பயனர் ஐ.டி., யில் பதிவு செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நான்கு ரயில்வே முன்பதிவு டிக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மகேஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்து, கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Previous Post Next Post