ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே,பவானிசாகர்அணைஉள்ளது.இந்த அணை ஆசியாவிலேயே 2 வது மிகப்பெரிய மண் அணை ஆகும். மேலும் தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையாகும். இந்த அணை யில் இருந்து, வெளியேற்றப்படும் நீர், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 2. 47 இலட்சம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களும் பயன் பட்டு வருகின்றன. இங்கு முறையே,. அரக்கன் கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால் மற்றும் காலிங்கராயன் வாய்க்கால், கீழ் பவானி வாய்க்கால் மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த அணைக்கு பவானி ஆறு மூலம் வரும் நீர், பில்லூர் அணையில் சேமிக்கப்பட்டு, உபரிநீர் இந்த அணை க்கு வரும். மேலும் மேயாறு மூலமும் நீர்வரத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, பவானி சாகர் அணை நீர்ப் பிடிப்பு பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி களான,கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக பவானி சாகர்அணைக்கு,நீர்வரத்துதொடர்ந்து அதிகரித்தவண்ணம்உள்ளது. பவானி சாகர்அணையின்முழகொள்ளளவான 105 அடியை எட்டும் தருவாயில், கடந்த சில நாட்களாக,பில்லூர்அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியதால், பில்லூர் அணையில் இருந்து, உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்பட்்டு வருகிறது.
இந்த நீர் பவானி ஆற்றின் மூலம், பவானி சாகர் அணைக்கு வருவதால், அணை யின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், இன்று காலை 10 மணி நிலவரப்படி, அணையின் நீர் மட்டம் 90.80 அடி உயரத்தை எட்டியுள்ளது. அதிகாலை 2 மணி நிலவரப்படி, அணை கட்டி, பயன் பாட்டிற்கு வந்தது முதல், 40-வது முறையாக, அணை யின் நீர்மட்டம் 90 அடி உயரத்தை எட்டியுள்ளது.
அணைக்கு, காலை 10 மணி நிலவரப்படி, தற்போது விநாடிக்கு, 20,947 கன அடி நீர் வரும் நிலையில், தற்போது அணையில் இருந்து, அரக் கன் கோட்டை தடப்பள்ளி மற்றும் வாய்க்கால் பாசன பகுதி விவசாயத் திற்கு, 700கன அடி நீரும், காளிங்க ராயன் வாய்க் காலில் 500 கன அடி நீரும்,குடிநீர் தேவைக்கு பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், வாய்க் காலில், 5 கன அடி நீரும், மொத்தம் 1305 கன அடி நீர் வெளியேற்றப் படு கிறது.பவானிசாகர் அணையில்,32.8 டி.எம்.சி. நீர் தேக்கி வைக்க முடியும் என்ற நிலையில், தற்போது அணை யில் 22.11 டி.எம்.சி நீர் இருப்பில் உள்ளது. பவானி சாகர் அணையின் நீர்மட்டம், தொடர்ந்து உயர்ந்து வருவதால், விவசாயிகளும்,மூன்று மாவட்ட மக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.